Header Ads



வீதியை சுத்தம் செய்து தருமாறு, கல்முனை மேயரிடம் மக்கள் கோரிக்கை (படங்கள்)

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனைக்குடி பிரதான வீதியில் நகர மண்டபத்திற்கு முன்னால் உள்ள வீதி மக்கள் பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நகர மண்டபத்திற்கு முன்னால் ஸம்ஸம் அரிசி ஆலைக்கு அருகில் செல்லும் (மரைக்காயர் குளத்தடி) விதியே இவ்வாறு மிக மோசமாகவுள்ளதோடு மரங்கள் வளர்ந்து இவ்வீதி காடாகக் காட்சியளிக்கின்றது. 

அத்துடன் ஒரு சிலர் இரவு வேளைகளில் இவ்வீதியை சமுக விரோத செயல்களுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இவைகளைத்தடுக்கும் பொருட்டும் இவ்வீதியை மக்கள் பயன்படுத்தும் பொருட்டும் உடனடியாக இவ்வீதியை துப்பரவு செய்து தருமாறு மக்கள் கல்முனை மாநகர சபை முதல்வரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




No comments

Powered by Blogger.