கொம்பனி வீதியிலிருந்து அகற்றப்படுவோருக்கு வீடுகள் அமைத்து கொடுக்கவேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
(Sfm) புதிய நிர்மாணிப்புகள் காரணமாக எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் கொம்பனி வீதியின் தமது வீடுகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகர அபிவிருத்தி சபைக்கு இந்த உத்தரவு இன்று 21-10-2013 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வீடுகளில் இருந்து வெளியேறி தற்காலிக குடியிருப்புகளில் குடியேறுவோருக்கு உரிய வாடகை கொடுப்பனவுகளை அளவையியல் திணைக்களம் வழங்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதிய வீடுகள் தேவையில்லை என்று நட்டஈட்டை கோருவோருக்கு அளவையியல் திணைக்களம் ஒரு வருடத்துக்குள் உரிய நட்டஈட்டை வழங்கவேண்டும்.
அதேநேரம் குறித்த நட்டஈட்டை பெற்றுக்கொண்டவர்கள் ஒரு வருடத்துக்குள் தமது தீர்மானத்தை மாற்றி புதிய வீடுகள் வேண்டும் என்று கோரும் போது அதனை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment