Header Ads



மலையக ஊடகவியலாளர் அமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்

(L.A.U.L.M.Naleer)

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்துத் தோற்றுவிக்கப்படவுள்ள மலையக ஊடகவியலாளர் அமைப்புத் தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று கண்டி ஜின்னா கேட்போர் கூடத்தில் 27ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒன்று கூடல் கலாநிதி அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெறுவதுடன் அவர் அங்கு சிறப்புரை ஒன்றையும்  நிகழ்த்தவிருக்கின்றார். இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ள விரும்புகின்ற  மத்திய, சப்பரகமுவ, ஊவா மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அல்லது அத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள முடியும். வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் இந்த அமைப்பில் இணைந்து செயல்பட  விரும்பி ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்டிருப்பதால் அவர்களுக்கும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது என்று ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட ஆசனங்களே கேட்போர் கூடத்தில் இருப்பதால் இந்த அமர்வில் பங்குகொள்ளவிரும்புகின்றவர்கள்  முன்கூட்டியே தமது ஆசனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் 0777275758, 0777842849 தொடர்பு கொண்டு தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் சார்பில் எல்.ஏ.யூ.எல்.எம். நளீர் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.

No comments

Powered by Blogger.