பிரதமரை கன்னத்தில் அறைந்தவர், தேர்தலில் போட்டியிடுகிறார்
நேபாள மாவோயிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசாந்தாவை, கன்னத்தில் அறைந்த இளைஞர், காத்மாண்டு நகரில், அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
நேபாளத்தில் பாரம்பரியமாக இருந்த மன்னராட்சியை, மாவோயிஸ்ட்கள் போராடி முடிவுக்கு கொண்டு வந்தனர். இதற்கு காரணமான, மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா, நேபாள குடியரசின், முதல் பிரதமராக பொறுப்பேற்றார். பிறகு, கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பதவி விலகினார். இதற்கிடையே, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், பிரசாந்தா, தன் வீட்டில், முக்கிய தலைவர்களுக்கு தேநீர் விருந்தளித்தார்.
"இளைஞர் கம்யூனிஸ்ட் லீக்' என்ற கட்சியைச் சேர்ந்த, பதம் கன்வார், 25, என்பவர், இந்த விருந்தின் போது, பிரசாந்தாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால், பிரசாந்தா நிலை குலைந்து போனார். அவரது மூக்கு கண்ணாடி, கீழே விழுந்து உடைந்தது. "அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, பிரசாந்தா கேட்டு கொண்டதால், பதம் கன்வார் விடுவிக்கப்பட்டார். நேபாளத்தில், அடுத்த மாதம், 19ம் தேதி, பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. காத்மாண்டு நகரில், பிரசாந்தா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பதம் கன்வார், சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக, அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
Post a Comment