இந்நாடு சிங்கள இனத்திற்கு இல்லாமல் போகும்போது, பௌத்தம் அழிந்து போகும் - ஞானசார தேரர்
8 லட்சத்து 90 ஆயிரம் சிங்கள பெண்கள் நாடு முழுவதும் அமைந்துள்ள கருக்கலைப்பு மையங்களில் கருக்கலைப்பு செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்புக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தேரர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள பௌத்த மக்களின் இனப் பெருக்க வேகத்தை குறைக்கும் நோக்கில் சில வைத்தியசாலைகளை தளமாக கொண்டு இந்த கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புள்ளிவிபரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. சில கிராமங்களில் வறிய குடும்பங்களை சேர்ந்த இளம் வயது பெண்கள் அச்சுறுத்தப்பட்டு கருக்கலைப்பு இணங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த நாடு ஒரு காலத்தில் சிங்கள இனத்திற்கு இல்லாமல் போகும் நேரத்தில் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும். இதனால் இது சம்பந்தமாக சுகாதார அமைச்சர் முக்கிய கவனம் செலுத்தி சட்டவிரோத கருக்கலைப்பு மையங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேரர் அவர்களே உங்களுடைய உண்மையான பிரச்சினை என்ன? சிங்கள பெண்கள் கருக்களைதால் அதற்க்கு நாங்கள் பொறுப்பு இல்லை, நான் நினைக்கிறேன் அடுத்த தேர்தலில் போட்டி போட்டு பாராளுமன்றம் செல்வதுதான் உங்களுடைய நோக்கமா? அப்படி என்றால் இந்த விளையாட்டு சரியானது. புத்தர்கள் பெருகவேண்டும் இந்த நாடு புத்த நாடு என்று கூறும் புத்த துறவிகள் இனபெருக்கதுக்கு என்ன பங்களிப்பை கொடுத்துள்ளீர்கள்?
ReplyDeleteநீங்கள் கல்யாணம் செய்வது ஆகாது, அரசாங்கம் உங்களுக்கு எல்லா வசதிகள் கொடுப்பனவுகள் எல்லாம் கொடுக்குது சும்மா சந்தோசமாக வாழ்ந்துகொண்டு அறிக்கைமட்டும் விடாமல் கல்யாணம் முடித்து பில்லைபெத்துபார் அப்போ தெரியும் வாழ்க்கை செலவு மேட்டர். அநேகமான தாய்மார்கள் பிள்ளைகளை வளர்க்க வசதின்மையால் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள், இது வருந்ததக்கவிடயம்,
உங்கள் சமுதாயம் பெருக வேண்டுமானால் நாங்கள் ஒண்டுமே செய்ய முடியாது. நாங்கள் புத்த சமுகத்தை பெருக்க முயன்றால் அது பெரும் பிரச்சினை ஆகிவிடும்.
ஒண்ட பேச்சு செல்லாக்காசு. சமூகம் உன்னை ஓர் ஏமாளியாகவே பார்க்கிறது. எனவே நீ எட்டு இலட்சம் அல்ல என்பது இலட்சம் என்று அறிக்கை விட்டாலும் பரவாயில்லை. ஒண்ட சமூகமே உனக்கு பைத்தியம் தலைக்கேறி என்று உணர்ந்துவிட்டார்கள். எனவே எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கத்தித் தொலை. உனக்கு எப்போதும் பெண்கள் பற்றித்தான் அதிக கவலை.
ReplyDeleteExcellent
ReplyDelete