பொத்துவில் ஜுனியர் கொலிஜில் சிறுவர் தின நிகழ்வு
(சம்சுல் ஹுதா)
2013.10.01 செவ்வாயக்கிழமை இன்று உலக சிறுவர் தினம் உலகளாவிய ரிதீயில் கொண்டாடப்படுகிறது. சிறுவர் தினமாகிய இன்றே முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப் புனித உணர்வுமிக்க தினத்தில் சிறுவர்களின் எல்லா உரிமைகளும், கடமைகளும் அன்பும் அரவணைப்புடனும் பாதுகாத்து வழி நடாத்தப்பட வேண்டும் எனும் எண்ணப்பரம்பலுடன் 'சிறுவர்களாகிய எங்களின் கேடயமாக இருங்கள்' எனும் தொனிப் பொருளில் பொத்துவில் ஜுனியர் கொலிஜின் ஒரு பிரிவாகிய முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வு அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் பள்ளியின் ஆசிரியைகளான அனூஸியா, .றிஸ்னா. தையுபா ஆகியோர்களின் செயலாற்றுகையுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் வெளிநாட்டவர்கள் வருகை தந்து சின்னஞ் சிறு சிறார்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்கள், அத்தோடு முன்பள்ளி பிள்ளைகளின் பெற்றோரே பிரதம அதிதிகளாக வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அழகியல் அம்ஸமாகும். இந்நிகழ்வில் மாணவர்களின்கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Post a Comment