வடமாகாண சபை தேர்தலை வரலாற்று நிகழ்வாகப் பார்க்கிறேன் - ஜனாதிபதியிடம் சல்மான் குர்ஷித்
(ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு)
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் இன்று 08-10-2013 ஜனாதிபதி இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான அபிவிருத்தி மூலோபாய நோக்கங்களின் அடிப்படையில் பல்வேறு பரஸ்பர நலன்கள் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அண்மையில் நடைபெற்று முடிந்த வடமாகாண சபைக்கான தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்த குர்ஷித்,
பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தேர்தல் நடைபெற்றதைப் பாராட்டியதோடு, இது சமுகத்திற்கான ஒரு முக்கியமான கட்டம் என்றும் தான் இதனை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பராளுமன்றமே சிறந்த இடம் எனக் குறிப்பிட்டதோடு, பாராளுமன்ற தெரிவுக்குழு கலந்துரையாடி மக்கள் விரும்புகின்ற ஒரு தீர்வுக்கு வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களுக்கிடையே எழும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ராஜபக்ஷவும் குர்சிஷித் அவர்களும் கலந்துரையாடினர். மீனவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தாங்களாகவே கண்டுகொள்ளும் வகையில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர் சமூகங்களுக்கிடையில் ஒரு கலந்துரையாடலுக்கான வசதியைச் செய்து கொடுப்பது சிறந்த வழியாகும் என உடன்பாடு காணப்பட்டது.
இலங்கை மற்றும் இந்திய வர்த்தகர்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் வர்த்தக சமூகங்களுக்கு மத்தியிலும் இத்தகையதோர் அனுகுமுறை முன்மொழியப்பட்டது. கொழும்பிலுள்ள இந்திய உயரிஸ்தானிகர் திரு. வை கே சிங்ஹாவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய உயரிஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Post a Comment