ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதும், ஏற்றுக்கொள்ளாததும்..!
(Adt) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இணக்கம் எட்டப்படாத யோசனைகள் கட்சியின் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (15) காலை ஐக்கிய பிக்குகள் முன்னணி சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரியவிடம் எட்டு யோசனைகளை முன்வைத்தது.
அதில் ஐந்து யோசனைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஸ்ட தலைவராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தலைவராகவும் செயற்பட வேண்டும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி முதலாவது யோசனையாக குறிப்பிட்டுள்ளது.
கட்சியை இயக்கிச் செல்ல தலைமை சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அது கட்சியை இயக்கிச் செல்லும் பூரண அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் இரண்டாவது யோசனை முன்வைக்கப்பட்டது.
அமைக்கப்படும் சபை தலைமை சபை என பெயரிடப்பட வேண்டும் என மூன்றாவது யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் தலைவர் சபையிம் ஒப்படைக்கப்பட வேண்டும் என நான்காவது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சியால் முன்னெடுக்கப்படும் அனைத்து நியமனங்கள் மறுசீரமைப்புக்கள் அனைத்து தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் கட்சியின் தலைவர் சபைக்கே இருக்க வேணடும் என ஐந்தாவது யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை சபை அமைக்கப்பட்ட பின்னர் கட்சியின் செயற்குழு உள்ளிட்ட கட்சியின் அனைத்து அமைப்புக்களையும் இயக்கும் அதிகாரம் தலைவர் சபைக்கு பூரணமாக ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆறாவது யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை சபையின் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஒன்பது பேர் தலைமை சபையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தலைமை சபையில் உள்ளடங்கும் ஏனையவர்களை ஐக்கிய பிக்குகள் முன்னணியே தெரிவு செய்யும் எனவும் ஏழாவது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து யோசனைகளும் இரண்டு வாரத்துக்குள் செயற்படுத்த வேண்டும் என தனது எட்டாவது யோசனையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய பிக்குகள் முன்னணியினால் முன்வைக்கப்பட்ட முதலாவது யோசனையை ரணில் விக்கிரம சிங்க ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது யோசனைகளையும் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொள்ளவில்லை என அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதி பெற வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Post a Comment