மலாலாவுக்கு கனடா நாட்டின் கௌரவ குடியுரிமை
பாகிஸ்தானின் இளம் பெண் மலாலா யூசஃப்ஸாய்க்கு கனடா கவுரவ குடியுரிமை வழங்குகிறது. இத்தகவலை பாகிஸ்தான் வானொலி இன்று அறிவித்துள்ளது. இவர் கவுரவ கனடியன் குடியுரிமை பெறும் 6வது நபர் ஆவர்.
நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ, தலாய்லாமா, பிரிட்டீஸ் வர்த்தகர் அகாகான் மற்றும் ரவுல் வாலன்பெர்க்க் ஆகியோருக்கு அடுத்தபடியாக கனடியன் கவுரவ குடியுரிமை பெறும் பெருமைக்குரியவராக மலாலா விளங்குகிறார்.
சமீபத்தில், இவரின், 16வது பிறந்த நாளின் போது, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, இவரின் பிறந்த நாளை, "மலாலா நாள்' என, ஐக்கிய நாடுகள் சபை கவுரவித்து உள்ளது. ""துப்பாக்கி மூலம், என்னைக் கட்டுப்படுத்த முடியாது. துப்பாக்கிக் குண்டுகளை விட, கல்விக்குச் சக்தி அதிகம்,'' என்று வீராவேசமாக பேசினார்.""மலாலா நாள், என்னுடைய நாள் மட்டுமல்ல; இந்த உலகின் ஒவ்வொரு பெண்ணின் நாள்; உரிமைக்காகப் போராடும், ஆண், பெண் அனைவரின் நாள்,'' என, மலாலா ஆற்றிய உரை, உலகம் முழுவதும் ஒலித்தது.
16 வயதான இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு தலிபான் அமைப்பால் தாக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு அனைவருக்கும் கல்வி கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment