பள்ளிவாசலுக்கு பின்னழகை காட்டி 'போஸ்' கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றப்பட்டார்
அபுதாபியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றுள்ள பாப் இசை பாடகி ரிஹான்னா அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் போட்டோக்களுக்கு 'போஸ்' கொடுத்தார்.
கருப்பு நிற உடையில் பளபளக்கும் சிகப்பு நிற லிப் ஸ்டிக் மற்றும் நகப்பூச்சு அணிந்திருந்த அவர் மசூதியின் முன் வாசலை நோக்கி பின்னழகை காட்டியபடி படுத்தும், அமர்ந்தும், முதுகை காட்டியபடி நின்றும் போஸ் கொடுத்தார்.
இதனையறிந்த மசூதி நிர்வாகம் ரிஹான்னாவை மசூதிக்குள் அனுமதிக்காமல் அவரை உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
அநாகரிகமான வகையிலும், மரியாதை குறையான முறையிலும் மசூதி நிர்வாகத்தினரிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் மசூதியின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தும் வகையில் புகைப்டங்களுக்கு போஸ் கொடுத்ததால் அவர் வெளியேற்றப்பட்டார் என மசூதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது 'இன்ஸ்டா கிராம்' மூலம் ரிஹான்னா வெளியிட்டுள்ளார். அவற்றை பாராட்டியும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்
Those who praise her, for this work... no question... they do not know religion or do not follow religion.
ReplyDelete