புத்தளத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை அலுவலகமொன்று புத்தளத்தில் இன்று 23-10-2013 திறக்கப்படவுள்ளது.
அத்துடன் மேலும் 6 கிளை அலுவலகங்களை திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா குறிப்பிட்டார்.
புத்தளம் பிரதேச மக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைபாடுகளை பதிவுசெய்வதற்காக இதுவரை காலமும் அனுராதபுரம், கண்டி அல்லது கொழும்பிற்கு செல்லவேண்டியிருந்தது.
இதனை கருத்திற்கொண்டே இன்று புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
அரச நிறுவனங்களில் சேவையொன்றை பெற்றுக்கொள்வதில் அல்லது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதில் பிரச்சினை காணப்படின், இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியுமென கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்தார்.
Post a Comment