கபீர் ஹசீமுக்கு என்ன உரிமையுள்ளது - குணரத்ன தேரர்
(Nf) ஐக்கிய தேசியக் கட்சியன் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் மீட்டியாகொட குணரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதற்காக ஐக்கிய பிக்குகள் முன்னணி முன்வைத்த 8 அம்ச யோசனைத் திட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் வேறொரு யோசனைத் திட்டத்திற்கான எவ்வித தேவையும் இல்லை என ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பது தொடர்பிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் தமது சார்பில் முன்வைப்பதற்காக யோசனைத் திட்டமொன்றை தயாரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீமுக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.
''எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவேண்டிய தேவையே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எமக்கு உள்ளது. இதன் காரணமாகவே மகா சங்கத்தினர் முன்வந்து இத்தகைய யோசனைகளை முன்வைத்தார்கள். கட்சியின் தலைமைத்துவமும் அதனை ஏற்றுக்கொண்டது. அதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேறு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக எமக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது. அவை அநாவசியமானவை. காரணமற்றவை. கபீர் ஹசீம் இத்தகைய யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக பத்திரிகைகள் மற்றும் வேறு வட்டாரங்கள் ஊடாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கான கபீர் ஹசீமுக்கு உள்ள உரிமை என்ன. எவ்வித உரிமையும் இல்லை. அநாவசியமானது. மகா சங்கத்தினருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கலே இங்கு உள்ளது. ஆகையால் அந்த யோசனைகள் அவ்வாறே அமுல்டுத்தப்படவேண்டும். நாடும் அதனையே எதிர்ப்பார்க்கின்றது. அதனைவிடுத்து வேறு நபர்களின் யோசனைகளை செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை. அதேபோன்று அனைவரும் குழப்பமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகா சங்கத்தினரின் வேண்டுகோள் 14 நாட்களுக்குள் செயற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அதனையே கூற வேண்டியுள்ளது. வேறு நபர்கள் குழப்பமடைய தேவையில்லை. எவரும் இதில் தலையிட வேண்டாம். அநாவசியமானவர்கள் உள்ளே நுழையக்கூடாது. அதனை தெளிவாக கூற வேண்டும்''.
மத குருக்கள் எல்லாம் அரசியலில் வந்துதான் இந்த நாடு இவ்வளவு சீர்கேட்டுபோககாரணம்
ReplyDeleteஇது ஐக்கிய தேசியக்கட்சியின் BBS போல் தெரிகிறது. ????
ReplyDelete