Header Ads



வடமாகாணத்தில் முதலாவது பயிர் மருத்துவ முகாம்


வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவ முகாம் புத்தூர் நிலாவரையில் நடாத்தப்பட்டது. பயிர்களில் ஏற்படும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை விவசாயிகள் இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காகவும் இந்த பயிர் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும், தோட்ட மண் மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிர் மருத்துவமுகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார்,யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும் பூச்சியியல், மண்ணியியல் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.