Header Ads



உப்புப் பாவனை வாழ்நாளைக் குறைக்குமென சுகாதார அமைச்சு எச்சரிக்கை

(எம்.எம்.ஏ.ஸமட்)

அதிக உப்புப் பாவனை வாழ்நாளைக் குறைக்குமென உப்புப் பாவனையாளர்களை சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடபப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உப்புப் பாவனையாளர்களினால் நாளாந்த அடிப்படையில் அதிகளவு உப்பு உள்ளெடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரி 3.73 முதல் 5 கிராம் உப்பே உள்ளெடுக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் வயது வந்த உப்புப் பாவனையாளர்களினால் 12.5 கிராமுக்கு மேலதிகமான உப்பு நுகரப்படுகிறது.

உப்புப் பாவனையாளர்களின் தகவல்களின் படி 2012ஆம் ஆண்டில் நகர மற்றும் கிராமப் புறங்களைச் சேர்ந்த 20 முதல் 60 வயது வரையான ஆண்கள் பெண்களை விட அதிகளவு உப்பைப் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. 

தினமும் சாப்பிடும் சோறு மற்றும் கரி வகைகளில் அதிகளவு உப்புச் சேர்க்கப்படுவதே இவற்றுக்குப் பிரதான காரணமாகும். அத்துடன் அதிகளவு உப்பு நுகரப்படுவது உயர் அழுத்தம் உட்பட இதர தொற்றா நோய்களுக்கும் காரணமாகவுள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.