அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் மூளையை அவரது தம்பி திருடிவிட்டதாக முறைப்பாடு
அமெரிக்காவின் 38–வது ஜனாதிபதி ஆக இருந்தவர் ஜான் எப் கென்னடி. இவர் கடந்த 1961 முதல் 1963–ம் ஆண்டு வரை பதவி வகித்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். கடந்த 1963–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி தனது 46–வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டடார்.
இதுதொடர்பாக லீ ஹார்லி ஓஸ்வால்டு என்பவன் கைது செய்யப்பட்டான். அவர் இறந்த 2 நாட்களுக்கு பிறகு ஜேக்ரூபி என்பவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் ஜேம்ஸ் சுவான்சன் என்பவர் கென்னடி குறித்து ‘என்ட் ஆப் டேஸ்’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் சுட்டுக் கொல்லப்பட்ட கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது மூளையும் உடன் சேர்ந்து புதைக்கப்படவில்லை.
ஏனெனில், கென்னடி மூளையை அவரது தம்பி ராபர்ட் கென்னடி திருடி விட்டார். தற்போது அதை ஒரு கன்டெய்னரில் மறைத்து லாக்கரில் பத்திரப் படுத்தியுள்ளார் என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் கென்னடிக்கு ஏற்பட்டிருந்த நோய் குறித்தும், அதற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து மற்றும் சிகிச்சையை உலகம் அறியாமல் மறைப்பதற்காகவும் இதுபோன்று அவர் செய்திருக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.
Post a Comment