பௌத்தர்களுக்கு சேவையாற்றுகிறோம் என கூறிக்கொள்ளும் சிலர் முஸ்லிம்கள் மீது குறி
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் சிலர் முஸ்லிம் மக்களை குறிவைக்க முயற்சித்து வருகின்றனர்.
போர் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் மக்கள் நாட்டுடன் ஒன்றாக கைகோர்த்திருந்தனர். முஸ்லிம் மக்களை நாட்டுக்கு எதிரானவர்களாக பார்க்கக் கூடாது.
முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிக்க முயற்சிப்பவர்களுக்கோ அல்லது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கோ எப்பொழுதும் ஆதரவு வழங்கியதில்லை.
முஸ்லிம் தலைவர்கள் ஜெனிவாவுக்கு சென்று மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு, முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று கொடுத்தனர்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த எடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை வழங்கியே வந்துள்ளனர் என்றார்.
We'll done Rizad
ReplyDeleteஎன்ன ரிஷாட் ஒங்கட அறிக்கைய பாத்தா நல்லா தூங்கிட்டு இண்டு எழுந்திருக்கிங்க போல..
ReplyDeleteதேர்தல் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது இப்போதுதான் சமுதாயத்தின் நினைவு வந்து இருக்கிறது .மாஷா அல்லாஹ்
ReplyDelete