மேமன்கவியின் மொழி வேலி கடந்து..! (படங்கள் இணைப்பு)
மேமன்கவி தொகுத்து வெளியீட்ட மொழி வேலி கடந்து... எனும் நவீன சிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரு பார்வை நூல் நேற்று கொழும்பு 12ல் உள்ள பிறைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு சுமனசிறி கொடகே திருமதி கொடகே டொமினிக் ஜீவா ஆகியோர் முன்னிலையில் இடம் பெற்றது. நூலின் முதற்பிரதியை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளரும் புரவலருமான ஹாசீம் உமர்க்கு கொடகே அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில்வரவேற்புரையை ஊடகவியலாளாரன கே. பொன்னுத்துறை, நூல் அறிமுகத்தினை திறனாய்வாளர் கே.எஸ்.சிவக்குமாரன், ருகுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க, மொழிபெயர்ப்பாளர் ஹேமச்சந்திரபதி ஜயசிங்க மற்றும் நூலசிரியர் மேமன்கவியும் உரையாற்றினார்கள்.இந் நிகழ்வில் தமிழ் சிங்கள இலக்கியவாதிகள் மற்றும் மேமன் சமுகத்தவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment