Header Ads



நிந்தவூர் விளையாட்டு உத்தியோகத்தர் பதவி உயர்வு

(சுலைமான் றாபி) 

நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தராக கடமை புரிந்த  ஏ.எல். அனஸ் அஹமட் அவர்கள் விளையாட்டு அமைச்சின் அம்பாறை மாவட்ட கபடி பயிற்று விப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த விடயத்தினை அறிவிக்கும் விஷேட சந்திப்பு நேற்றையதினம் 04-10-2013 பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இடபெற்றது. இந்தக் கூட்டம் எதற்காக கூட்டப்பட்ட தென்று அறிய முடியாமல் இருந்த வேளை தனது விளையாட்டு உத்தியோகத்தர் பொறுப்பினை விட்டு விலகி கபடி விளையாட்டின் பயிற்றுவிப்பாளராக தான் நியமிக்கப்பட்டதனை அறிவித்த பொழுது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது. 

மேலும் இவர் கடந்த காலங்களில் சிறந்த நிர்வாக கட்டமைப்பின் மூலம் வீரர்களை கபடி மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளின் மூலம் மாகாண மற்றும் தேசிய ரீதியில் கௌரவத்தினை பெற்றுக் கொடுத்திருந்தார். இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரும், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகருமான ஐ.எல்.எம். இப்ராஹிம் மற்றும் நிந்தவூரின் அனைத்து விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இதேவேளை  ஏ.எல். அனஸ் அஹமட் அவர்கள்  கடந்த 2000 - 2013 ஆண்டு காலப்பகுதி வரை  நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தராக கடமை யாற்றி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


1 comment:

Powered by Blogger.