ஹஜ்ஜுக்கு வந்து இறந்ததாக கருதப்பட்டவர், மக்கா மருத்துவமனையில் மீட்பு
இறந்த விட்டதாக கருதப்பட்ட, சென்னை நபர், மெக்கா மருத்துவமனையில் உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர், பர்கத்துல்லா; இவரது மனைவி பதருன்னிசா. இருவரும், சவுதி அரேபியாவுக்கு, ஹஜ் யாத்திரைக்கு சென்றனர். முதல் நாள் யாத்திரையின் போதே, பர்கத்துல்லா காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் பர்கதுல்லாவை காணாததால், அவர் இறந்து விட்டதாக, பதருன்னிசா கலங்கினார். இது தொடர்பாக, சென்னையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். இந்தியாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, மெக்காவில் உள்ள மருத்துவமனையில், முதியவர் ஒருவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாக தெரிவித்தது. மினா நகரில் யாத்திரை மேற்கொண்ட, பதருன்னிசாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் உயிரோடு இருப்பதை அறிந்து பதருன்னிசாவும், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆம்புலன்சில் இருந்தபடியே, பர்கத்துல்லா, அராபத் மலை பகுதிக்கு சென்றுள்ளார்.
Post a Comment