வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுமாறு ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(கொழும்பிலிருந்து ஏ.எல்.ஜுனைதீன்)
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று 31 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் லிப்டன் சுற்றுவட்டத்தில் உள்ள தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் சிங்கள தமிழ் முஸ்லிம் ஒற்றுமையைப் பாதுகாப்போம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை உடனடியாக குடியேற்று. இலங்கை நாடு எல்லோருக்கும் சொந்தம்,என்பன போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஏற்பாட்டாளரும் முன்னாள் எம்.பி.யுமான மொஹமட் முஸம்மில், எம். எப். எம். பரூத் மெளலவி, டாக்டர் ஏ.சி.எம்.சலீம் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். முஸ்லிம் பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
சகோதரர் Yahya Mohammed அவர்கள் எதிர்பார்த்தது போலவே, நீலிக்கண்ணீர் முசம்மிளின் போலி ஆர்ப்பாட்டத்தின் புகைபப்டங்கள் யாழ் முஸ்லிம் வெளியிட்டுள்ளது.
ReplyDeleteஇதில் ஒரு அகதியையாவது அடையாளம் காட்ட முடியுமா?
இது வடக்கு முஸ்லிம்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு போலி ஆர்ப்பாட்டம் என்பது தற்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும்..
நீங்கள் வடமாகாணத்தை சேர்ந்தவர்தானே மட்டக்குளியிலே காக்கா தீவுக்கு பக்கத்தில் இருக்கும் அகதிமுகாம் யாழ்பாணத்தில் இருந்து திரத்திஅடிக்கபட்டவர்களினது இல்லையா? பர்தா போட்டிருக்கும் பெண்கள் அந்த அகதிமுகாமை சேர்ந்தவர்கள் இல்லையா?
ReplyDeleteYahya Mohammed அவர்களே, உங்களுக்கு கொழும்பு சேரிப் புறப் பெண்களுக்கும் வட மாகாண அகதிப் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான். முகத்தைத்தான் உங்களால் அடையாளம் காண முடியவில்லை, கையில் வைத்திருக்கும் பதாதைகள் சிங்களத்தில் மட்டுமே இருப்பதை வைத்தாவது இவர்கள் அவர்கள் அல்ல என்பதையாவது ஊகித்து இருக்கலாம் அல்லவா?
ReplyDelete