Header Ads



தேர்தல் செயலகத்தின் அறிவிப்பு

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முறையிடுவதற்கு எதிர்வரும் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

தற்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமசேவையாளர் காரியாலயம், பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், அத்துடன், மாவட்ட தேர்தல் காரியாலயங்கள் ஆகியவற்றில் தற்போது வாக்காளர் பெயர்பட்டியல்கள் திருத்தத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர் பெயர் பட்டியலில் இதுவரை தமது பெயர்கள் உள்ளடக்கப்படாதவர்கள் அதற்கான கோரிக்கையை விடுக்கவும், தகுதியானவர்கள் தமது பெயர்களை உள்ளடக்குவதற்கும், பெயர்களின் மாற்றங்கள் இருப்பின் ஆட்சேபனைகளை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களின் பொருட்டு 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.