கொம்பனி வீதி, நீர் தாங்கியில் பாம்புக்குட்டி
கொம்பனி வீதி மாடி வீட்டின் குளியலறையில் உள்ள நீரைத் தேக்கி வைக்கும் பெரலில் பாம்புக்குட்டி.
கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள டி சொய்ஸா மாடி வீட்டுத் தொகுதியில் இரண்டாம் மாடியில் உள்ள மஸ்னவி என்பவரது வீட்டின் குளியலறையின் தண்ணீர் பெரலிலேயே பாம்பு கண்டு பிடிக்கப்பட்டது.
மஸ்னவி என்பவர் இன்று (19) காலையில் குளிப்பதற்காக குளியலறையில் உள்ள பெரலில் கோப்பையை விட்டு தண்ணீர் எடுக்கும்போது பெரலின் ஓரத்தில் ஒன்று நெலிவதை அவதானித்தவர் அயலவர்களைக் கூட்டிக் காட்டியபோது அது இனங்கான முடியாத சிறிய பாம்பு உயிருடன் நீரில் ஓடித்திரிந்தது மேற்படி பாம்பு வீட்டின் நீர்க்குழாய் மூலமே வந்துள்ளது.
Post a Comment