மாணவர்களின் ஆரோக்கியம் கருத்திற்கொள்ளப்பட்டு விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும் - ஆரிப் சம்சுடீன்
(எம்.எம்.ஏ.ஸமட்)
மாணவர்களின் ஆரோக்கியம் கருத்திற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
8-10-2013 காலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸ்ஸநாயக்க தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற கல்வி அமைச்சிக்கான ஆலோசனைக் குழுக் கூட்;டத்தில் மேற்படி ஆலோசனை அவர் முன்வதைதுள்ளார்.
விளையாட்டு உடல், உள ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. போதிய உடற் பயிற்சி இன்றி மாணவர்களின் ஆளுமை விருத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திமின்றி, நீரழிவு போன்ற தொற்றா நோய்களின் தாக்கத்துக்கும் மாணவர்கள் உள்ளாகி வருகின்றனர்.
மாணவர்களின் உடல், உள ஆரோக்கியம் மேம்படுத்தப்பட வேண்டுமாயின் அவர்கள் உடற் பயிற்சி செய்வதிலும் விளையாட்டில் ஈடுபடுவதிலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
அந்ந வகையில், கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் குறைந்தது 5 வருடங்களுக்கு ஏதோவொரு விளையாட்டில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆலோசனையை முன்வைப்பதாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இவ்வாலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, மாகாண சபையின் தவிசாளர், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உட்பட திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment