Header Ads



பத்துளு ஓயா - லுக்மானுல் ஹகீம் அரபுக் கலாசாலைக்கு உதவும்படி வேண்டுகோள்



பத்துளு ஓயா - லுக்மானுல்  ஹகீம் அரபுக் கலாசாலை 2008ம் ஆண்டில் இருந்து ஓலை குடிசையில் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இக்கலாசாலைக்கென பத்துளு ஓயாவைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ராசிக் என்பவரால் 70பேர்ச்சஸ் காணி நன்கொடையாக வழங்கப்பட்டு அதில் நான்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்பொழுது 70 மாணவர்களுடன் கலாசாலை இயங்கி வருகிறது.

70 மாணவர்களில் 10 க்கு மேற்பட்டவர்கள் அநாதைகள். மேலும்  கால் அங்கவீனமுற்ற ஒருவரும், கை இழந்த ஒருவரும், புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சில மாணவர்களும் கல்வி கற்று வருகின்றமை இந்த மத்ரஸாவுடைய சிறப்பு அம்சமாகும்.

இருந்தும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டும் மாணவர்கள் சில சிரமங்களோடு தமது கல்வியினைத் தொடர்கின்றார்கள். அவ்வாறான சிரமங்களில் முக்கியமான ஒன்றாக கழிவரை இல்லாமையின் காரணத்தினால் 100 அடி தூரத்தில் உள்ள தற்காழிக கழிவரைக்குச் செல்கின்றார்கள். இந்த சிரமத்தை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி மத்ரஸாக்குரிய காணியில் கழிவரை அமைப்பதற்காக திட்டமிடபட்டுள்ளது. இதற்கான கட்டுமானத் தொகை ரூபா. 12,45052.00 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக உங்களால் இயன்ற உதவியை  செய்து தருமாறு வேண்டிக் கொள்கின்றோம். (அல்லாஹ் தங்களுடைய செல்வத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் அபிவிருத்தி செய்வானாக ஆமீன்.)

தொடர்புகளுக்கு: 

இர்ஷத் மௌலவி: (அதிபர்)       0771520577 
அப்துர் ரஹ்மான் மௌலவி: ஆசிரியர் 0717343567

AC Name:  Al - Lukman Arabic College.
A/C. 8356292
Bank of Ceylon (Kalpitiya Branch)
Branch Cod: 0779
Bank cod: 7010
Swift: BCEYLKLH


No comments

Powered by Blogger.