Header Ads



மீன்களை வேட்டையாடிய எலிகள் சுட்டுக்கொலை


சீனாவில், குளத்திலிருந்த மீன்களை கபளீகரம் செய்த ராட்சத எலிகள் கொல்லப்பட்டன.


சீனாவின், ஹுனான் மாகாணத்தில் உள்ள, ஷாவோயாங் என்ற ஊரில், குளத்தில் இருந்த மீன்கள் குறைந்து வருவதை அறிந்த கிராம மக்கள், இரவு, பகல் பாராது, குளத்தை கண்காணித்தனர். அப்போது, இரண்டு நீர் எலிகள், மீன்களை வேட்டையாடுவதை கண்டுபிடித்தனர். இந்த இரண்டு எலிகளும், சாதாரண எலியை விட, பத்து மடங்கு பெரியதாகவும், 1 மீட்டர் நீளமும் இருந்தன. இதில் ஒரு எலி, 3 கிலோ எடையுள்ள மீனைப் பிடித்து, கரைக்கு எடுத்து வந்து, ஒரே மூச்சில் தின்றது. இவ்வாறு, குளத்தில் உள்ள மீன்களை காலி செய்யும், எலிகளை, பெரும் போராட்டத்திற்குப் பின், விவசாயிகள் பிடித்தனர். இந்த எலியை கொல்லும் முயற்சியில், இரண்டு கத்திகள் உடைந்தன. பின்னர் ஒரு வழியாக, எலியைக் கொன்று சமைத்து சாப்பிட்டு விட்டனர்.

சீனாவின் பல பகுதிகளில், எலிக்கறியை உண்ணும் பழக்கம் உள்ளது. எலிக்கறி, கோழியை விட மூன்று மடங்கு சத்தானது என, சீன மக்கள் நம்புகின்றனர்.

No comments

Powered by Blogger.