முஸ்லிம்கள் தீவிரவாதத்தை நிராகரித்து செயற்பட வேண்டும் - எம்.எம். சுஹைர்
மூதூர் முறாசில் எழுதிய முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளின் சில பதிவுகளின் பாகம் 1 நூலின் வெளியீட்டு விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர் அல்ஹாஜ் கலைவாதி கலீல் தலைமையில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற போது பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரான் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்திரணி எம்.எம். சுஹைர் ஆற்றிய உரை,
கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்குதல்கள் உட்பட சிறுபான்மை சமயத்தைச் சார்ந்தோருக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்செயலைத் தூண்டும் செயற்பாடுகளைச் செய்தவற்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு தாம் குறிப்பாக அச்சம் கொண்டதாக செப்டெம்பர் 25 அம் திகதி மனித உரிமை பேரவைக்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்குமாறு கேட்டிருந்தார்.
மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்ட பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்களின் தாக்குதல் தொடர்பான விபரங்கள் மனித உரிமை ஆணைக்குழு எதிர்நோக்கிய துயரமான புதிய நிகழ்வுகள் ஆகும். இந்த நாடு எதிர்நோக்கிய குற்றச்சாட்டுக்களின் முழுப் பொறுப்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பௌத்த தீவிரவாதிகள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூலை வரை இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சமயத் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புச் செயற்பாடுகள் தொடர்பாக 227 முறைப்பாடுகளை மனித உரிமை ஆணையாளர் அனுப்பியிருந்தார்.
கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிராக சமமான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன. கடும்போக்கு குழுக்களது அரச அனுசரணை அல்லது பாதுகாப்பு கிடைப்பதான கவலை அளிக்கக்கூடிய தகவல்கள் தமக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது விஜயத்தின் பின்னர் சமயங்கள் தொடர்பாக பொறுமையுடன் செயற்படுவதன் அவசியம் பற்றி ஜனாதிபதி அவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பது அவரது பாராட்டுக்கு உள்ளாகியிருந்தது.
சம்பவங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களை இலகுவாக அடையாளங் காணக்கூடியவர்களை அடையாளங் கண்டு, பொறுப்பானவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்துவதன் மூலம் இவ்வாறான செயற்பாடுகளை தாம் அங்கீகரிப்பதில்லை என்பதற்கு உச்ச சமிஞ்சை காட்டுமாற அவர் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேட்டிருந்தார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது சர்வதேச சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் எமக்கு குற்றஞ்சாட்டி எமக்கு எதிராகச் செயற்படுவது சில பலம் வாய்ந்த நாடுகள் இருப்பதனை எங்கள் நாட்டின் தேசப்பற்றுள்ள சகலருக்கும் தெரியும்.
நாட்டுக்கெதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக இந்தத் தீவிரவாதகள் தமது கவனயீனமான செயற்பாடுகளால் இந்த குற்றங்களை மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆகும் போது இலங்கைக்கு மேலும் கால அவகாசம் அளிக்காது சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம். அதன் பிரதிபலனாக அடுத்த சில வருடங்களில் திருப்தி அற்ற அறிக்கைகள் யுத்த குற்றச்சாட்டுப் பற்றிய காரணிகளை பாதுகாப்புச் சபைக்கு முன்வைத்தல், மற்றும் பாரதூரமான செயற்பாடுகள் இடம்பெற இடமுண்டு.
இந்தப் பின்னணியில் சமயங்களுக்கிடையே பொறுமை, நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில் இந்த நாட்டின் மூன்று பிரதான நிகாஜாக்கள் தலதா மாளிகையின் தியவடன நிலமையும் இணைந்து உருவாக்கியுள்ள தம்மதீப சபை என்ற அமைப்பு ஒரு பாராட்டுக்குரிய செயற்பாடாகும். இந்த நாட்டின் ஏனைய சகல சமயத்தவர்களும் இந்த சபையுடன் ஒன்று சேர்ந்து சர்வதேச ரீதியாக இந்த நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளில் இருந்து இலங்கையை பாதுகாப்பதற்கு செயற்பட வேண்டும்.
பௌத்த அறிஞர்கள் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினர் உட்பட மற்றும் பலர் இந்த தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பேசியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்களான நிமல் ஸ்ரீபாலடி சில்வா அனுரபிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி. திஸாநாயக்க, டாக்டர் ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, டினேஷ் குணவர்தன, டிலான் பெரேரா உட்பட பல அமைச்சர்கள் இந்த வரிசையில் அடங்குகின்றனர்.
வெறுப்பு வளர்வதற்கு இடமளித்தால் நாட்டிற்கும் புத்த சமயத்திற்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி இவர்கள் தமது கவலையைத் தெரிவித்துள்ளார்கள்.
எமது நாட்டில் நாம் பணிவான சிறுபான்மையினராக மட்டுமே வாழ வேண்டும் என எமக்கு அச்சுறுத்தி எம்மை பின்னே தள்ளிவிடும் கொந்தராத்தில் சில பலமான நாடுகள் இருக்கின்றன.
இந்த சக்திகளுக்கு இரையாகமல் முஸ்லிம்கள் தீவிரவாதத்தை நிராகரித்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவ்வாறு யாராவத செயற்படுவார்கள் இருந்தால் அது அந்த நாட்டின் அரசியல் யாப்பை மீளும் ஒரு செயற்பாட்டை அவருடைய கருத்துக்களுக்கு நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
நூலின் விமர்சனத்தை அஷ்ஷெய்க் ரவூப் செயின் நிகழ்த்தியதோடு, வரவேற்புரையை தினக்குரல் சிரேஷ்ட பத்திரிகையாளர் அல்ஹாஜ் எம்.ஏ. எம். நிலாம் நிகழ்த்தினார்.
Post a Comment