Header Ads



கல்முனை மேயர் ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாடு

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர முதல்வரினால் ஓழங்கு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நாளை புதன்கிழமை பி.ப. 7மணிக்கு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்தினால் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராஸாஹிபை முதல்வர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அதன் பிற்பாடான இன்றைய நிலைமை தொடர்பிலும் விளக்கமளிக்கும் முகமாகவும் இக் கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

இக்கலந்துரையாடலுக்கான அழைப்பிதழ் கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வளர்கள் போன்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.