இலங்கை வேடுவர்களின் வேதனை
வேடுவர்கள் கிரிக்கெட் துடுப்பாட்டம் விளையாடுவது அவர்களின் கலாசாரத்துக்கும் மரபுகளுக்கும் எதிரானது என்று கலாசார விவகார அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராக, வேடுவ சமூகம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
அமைச்சர் தம் மீது கட்டுப்பாடுகளை முனைவதாக குற்றம்சாட்டியுள்ள, வேடுவர்களின் மொழியியலாளர் உருவாரிகே விமலரத்ன, “வேடுவர்கள் துடுப்பாட்டத்தை நீண்டகாலமாகவே ஆடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
காலனி ஆதிக்கத்தில் இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டை எமது ஆசிரியர்கள் எமக்குக் கற்றுத்தந்துள்ளனர். ஆனால், நாம் இந்த ஆட்டத்தை ஆடும் போது, முழுக்காற்சட்டையையோ, சம்பாத்துகளையோ அணிவதில்லை.
வேடுவர் சமூகம் தமது இருப்புக்கு அச்சுறுத்தலான பல விடயங்களை இன்று எதிர்கொள்கிறது. முன்னைய காலங்களில் எமது முன்னோர்கள் விடியும் போது காட்டுக்குச் சென்று வேட்டையாடி விட்டு மறுநாள் திரும்புவார்கள்.
ஆனால் இப்போது இரவு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். எம் மீது புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. நாம் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லும் போது, ஒரு தீப்பெட்டியைக் கூட கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. கடுமையான சட்டங்களால் தான் வேடுவர்கள் தமது அடையாளத்தை விட்டுக் கொடுக்க நேர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment