Header Ads



ரணில் பதவி விலகவேண்டும் - வெடித்தது வன்முறை

(SfM) எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தெவிநுவர விஸ்ணுகோவிலுக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், மாகண சபை உறுப்பினர் மைத்ரி குணரத்னவின் தந்தை ஹேமன் குணரத்ன சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை காவல்துறையினரால் இவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்கான மூன்று பேர் உள்ளிட்ட காயமடைந்த ஏழு பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த காயமடைந்த தென்மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஸ்பகுமார காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பேரணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்நுள்ளது.

தென் மா.ச உறுப்பினர் கிரிஷாந்த காயம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தெவிநுவரவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் துப்பாக்கிசூட்டு காயங்களுடனான மூன்று பேர் உள்ளிட்ட காயமடைந்த ஏழு பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்த பேரணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பதட்ட நிலை காணப்பட்டது. 

இதேவேளை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் க்ரிசாந்த புஸ்பகுமாரவும் காயமடைந்த நிலையில் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.தே.க பேரணி - பதட்ட நிலை

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தெவிநுவர விஸ்ணுகோவிலுக்கு அருகில் இருந்து பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு குழு எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடத்தியதை தொடர்ந்து, பிரதேசத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது.

இதன் போது இரண்டு குழுக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக  செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பின்னர் நிலைமை சீரடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியில் பிளவை ஏற்படுத்தி, கட்சியை அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராகவே தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லசந்த குணவர்தன தெரிவித்தார்.

தற்போது இந்த பேரணி மாத்தறை நகரை அண்மித்துள்ளதாவும், அங்கு மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டிருப்பதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.