முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்களின் நிலைகள்..! (வாசிக்கத் தவறாதீர்கள்)
(திருமதி M நாஸிர்)
மாணவர்கள் வழி தவறுகிறார்கள் என்பது சமூகத்தில் பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டாகும் . இதற்குக் காரணங்கள் யாவை? என்பதை பல கோணங்களிலும் ஆராய்ந்து தீர்வைக் காண வேண்டிய து சமூக நலனில் அக்கறை கொள்ளும் ஒவ்வொருவரினதும் பொறுப்பாக இருந்து கொண்டிருக்கிறது.
மாணவர்கள் சிறந்த முறையில் வழி நடாத்தப்படுவதற்கு பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறந்த பண்புகளைப் பெற்றவர்களாக இருப்பதும் அவசியமானதாகும்.
பண்டைய காலங்களில் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிறந்த ஆசிரியர்களையே தெரிவு செய்தனர். பிள்ளைகள் எத்துறையில் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்களோ அத்துறையில் சிறந்து விளங்கும் நன்கு பாண்டியத்துவமுள்ள நல்லொழுக்கமுள்ள மிகவும் ஞானம் நிறைந்த மகான்களைத் தேடி கல்வி கற்பதற்காக அப்பிள்ளைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாடசாலைகளிலேயே கல்வி பயில வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் சிறந்த ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் உரிமை இல்லாமல் போய்விட்டது. “தடி எடுத்தவன் எல்லாம் சண்டைக் காரன்” என்பது போல யாரும் எத்தகைய பின்னணியைக் கொண்டவரும் ஆசிரியராகலாம் என்னும் நிலை பாடசாலைகளில் தோற்றம் பெற்றது. மாணவர்கள் தங்களது முன் மாதிரிகளாகக் கொள்ள சிறந்த பண்புகளைக் கொண்டிராதவர்களும் பாடசாலைகளில் ஆசிரியர்களாக்கப்பட்டார்கள். இதுவும் மாணவர்கள் வழி தவறக் காரணமாக அமைந்து விடுகிறது.
எமது முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்களின் நிலைகள் எவ்வாறு உள்ளன.
Ø பெரும்பாலான ஆசிரியர்கள் ஈமானிய இஸ்லாமிய உணர்வோடு செயற்படுவதில்லை. இஸ்லாம் வேறு பாடசாலைக் கல்வி வேறு என்ற சிந்தனையே ஆசிரியர்களிடத்தில் மேலோங்கி உள்ளது.
Ø பெரும்பாலான ஆசிரியர்கள் தொழுவதற்காகப் பள்ளிவாசலுக்கு சமூகமளிப்பதில்லை.
Ø வட்டி , மதுப் பாவனை ,மோசடி, புகைப் பிடித்தல் போன்ற பெரும்பாவங்களில் சில ஆசிரியர்கள் ஈடுபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
Ø சில ஆசிரியர்கள் சினிமா, இசை போன்றவற்றின் அடிமைகளாக இருக்கின்றனர்.
Ø சிலர் நாஸ்த்திகக் கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பதோடு அவற்றை மாணவ உள்ளங்களில் புகுத்த முயற்சி செய்கிறார்கள்.
Ø சில ஆசிரியர்கள் இஸ்லாம் அல்லாத கம்யூனிஸ்ம் சோசலிஸ்ம் போன்ற மேற்கத்தேய சிந்தனைக் கொள்கைகளையுடையவர்களாக இருக்கின்றனர்.
Ø சில ஆசிரியர்கள் முஸ்லிமல்லாதவர்களை மேம்படுத்திக் கூறுவதிலும் முஸ்லிம்களைத் தாழ்த்துவதிலுமே ஈடுபடக் கூடியவராக இருக்கின்றனர்.
Ø சில ஆசிரியர்கள் மாணவர்களைத் தங்களது அழகு அலங்காரங்களால் கவர வேண்டும் என்னும் சிந்தனையுள்ளவர்களாக இருக்கின்றனர்.
Ø சில ஆசிரியர்கள் தன்னிடம் கல்வி பயிலும் மாணவிகளைக் காமக் கண் கொண்டு பார்ப்பவர்களாகவும் தமது உணர்வுகளைக் கடுப்படுத்த முடியாமல் எழுத்து வடிவமாகவோ செயல் வடிவமாகவோ அதை வெளிக்காட்டக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
Ø புதிதாக நியமனம் பெற்ற இளைஞர்களான ஆசிரியர்கள் பருவ வயதையடைந்த மாணவிகளுக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஏற்படும் விபரீதங்கள் பல
Ø சில பாடசாலைகளில் பெண் அதிபர்கள், ஆசிரியைகள் சிலர் அந்நிய மதப் பெண்கள் போன்றோ அல்லது பூரண இஸ்லாமிய ஆடை அணியாதவர்களாகவோ காணப்படுகின்றனர். அல்லது பாடசாலைக்கு மாத்திரம் இஸ்லாமிய ஆடை வெளியிடங்களுக்கு வேறு விதமான ஆடைகளிலும் சில ஆசிரியைகள் காட்சி தருகின்றனர். அதேநேரம் மாணவிகளின் சீருடை இஸ்லாமிய முறையில் பேணப்பட வேண்டும் என பாடசாலைச் சட்டம் கூறும் அந்நிலை மிகவும் வேதனைக் குரியது. மாணவிகள் ஹிஜாபுடைய மறைவான வாழ்க்கை பற்றிய தாத்பரியத்தை தமது ஆசிரியைகளை முன் மாதிரியாகக் கொண்டு கற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது.
Ø சில இளம் பெண் ஆசிரியைகளின் நடை உடை நளினங்கள் போன்றவற்றின் கவர்ச்சியினால் தன்னையும் தனது படிப்பையும் இழந்த மாணவர்களும் எமது சமூகத்தில் உள்ளனர்.
Ø சில சலுகைகளுக்காக தமது கற்பை ஆசிரியர்களிடம் தொலைத்த முஸ்லிம் மாணவிகளும் எமது சமூகத்தில் உள்ளனர்.
Ø அதிகமான ஆசிரியர்கள் இஸ்லாமியக் கடமைகளான தொழுகை , நோன்பு, ஸகாத் போன்ற கடமைகளைப் புறக்கணிப்பவர்களாக உள்ளனர்.
Ø ஆசிரியர்கள் தங்களது பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் எண்ணத்திலேயே உள்ளனரே தவிர மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், மார்க்கப்பற்று, இறையச்சம் போன்றவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
Ø ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தான் கற்பிக்கும் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் சித்தியடைய வேண்டும் என்பதற்காக அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு தவறான குறுக்கு வழிகளைச் சொல்லிக் கொடுத்து சித்தியடையத் தூண்டும் ஆசிரியர்களும் எமது முஸ்லிம் சமூகத்தில் உள்ளனர்.
Ø சில புகைப்பழக்கத்திற்கு அடிமையான ஆசிரியர்கள் தமது புகைத்தலுக்குத் தேவையானவற்றை மாணவர்கள் மூலமாக வாங்கிக் கொள்ளவும் செய்கின்றனர்.
Ø சில ஆசிரியர்கள் ஐந்தாம் ஆண்டு, கபொத சாதாரண ,உயர் தரப் பரீட்சைகளுக்காகத் தயாராகும் காலங்களில் தொழுகையை நோன்பை விட்டு விடுவதற்கு ஆலோசனை கூறுபவர்களாகவும் இருக்கின்றனர்.
Ø பாடசாலை அதிபர்களை பரீட்சைகளும் சிரேஷ்ட தன்மையுமே தீர்மானிக்கின்றனவே தவிர நல்ல பண்புகளும் உண்மையான அறிவும் ஒழுக்கமும் இறை யச்சமும் திர்மானிப்பதில்லை.
இவ்வாறான ஆசிரியர்களால் அல்லாஹுத்தஆலா விரும்பக் கூடிய இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க முடியுமா? அல்லாஹுத்தஆலாவின் உதவியை இத்தகைய சமூகம் பெற முடியுமா? அல்லாஹ்வின் பொருத்தமும் உதவியுமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தினால் வெற்றி பெற முடியுமா?
பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் எவ்வாறு சிந்தனைக் குழப்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் எனப் பார்ப்போம்.
உதாரணமாக
ஒரு இறையச்சமுள்ள ஆசிரியர் பாடசாலையில் இஸ்லாத்தை நிலை நாட்ட வேண்டுமென பகீரத முயற்சியை மேற்கொள்வார். மாணவர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றியும் ஹலால், ஹராம் பற்றியும், சொர்க்கம், நரகம், மறுமை வாழ்க்கை பற்றியும் கூறுவார். பிள்ளைகள் மிகவும் பய பக்தியுடன் கேட்பார்கள் அவருடைய பாட வேளை முடிந்ததும் அடுத்த ஆசிரியர் வருவார் அவர் நாஸ்த்திகக் கருத்துக்களை மாணவர் முன்னிலையில் எடுத்துக் கூறக் கூடியவராக இருப்பார்.
அடுத்து வரக் கூடிய ஆசிரியர் சினிமா மோகமுடையவராகவும் இசைப் பிரியராகவும் இருப்பார். தான் பார்த்த படத்தை மாணவர் முன்னிலையில் விமர்சனம் செய்யக் கூடியவராக இருப்பார். படம் பார்க்காத மாணவனும் முதல் வேலையாக அவ் ஆசிரியர் கூறிய படத்தைப் பார்க்க வேண்டும் என முடிவெடுப்பான்.
சித்திரப் பாட ஆசிரியர் வந்து அழகிய உருவப்படமொன்றினை வரைந்த மாணவனைப் பாராட்டுவார். அழகிய உருவமொன்றினை வரையும் படி கரும்பலகையில் வரைந்தும் விடுவார். இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட உருவப்படம் வரைதல் முஸ்லிம் ஆசிரியரால் முஸ்லிம் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.
அடுத்து கலை விழாவுக்குப் பொறுப்பான ஆசிரியர் பாடலொன்றிற்கு நடனமாட மாணவர்களைத் தெரிவு செய்வார். ஒரு சினிமாப்பாடல் காட்சியில் வரும் நடனம் போன்று ஆட வேண்டும் என்பார். அதற்காக அம்மாணவர்கள் அப்பாடலை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியேற்படுகிறது. சினிமாவோடும் இசையோடும் தொலைக் காட்சியோடும் தொடர்பு ஆசிரியராலேயே ஊக்குவிக்கப்படுகிறது.
இவ்வாறு பலவகைப்பட்ட ஆசிரியர்களால் மாணவர்களிடையே சிந்தனைக் குழப்பமே ஏற்படுத்தப்படுகிறது.
அத்துடன் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை கொடுக்கத் தவறுவதும் அவர்களின் செயற்பாடுகளின் காரணத்தாலேயேதான்.
இதனால் ஒழுக்கமும் இறையச்சமும் கீழ்ப்படிவும் பணிவும் மிக்க மாணவ சமூகத்தை தோற்றுவிப்பது மிகக் கடினமான ஒன்றாகி விடுகிறது.
I appreciate the above mater which is on current situation. W can't expect type of teaches it will efect childrens education allah should give them "Hidaya". For the successful we have to make our self every house.
ReplyDeleteThe Schools are to educate children for a better living by teaching skills in many areas.Arts,Science and Commerce are the main three areas Children learn.Major part of this article goes around talking about "School failure to educate children to behave according to Islam."We must understand that Schools are not set up for teaching religious practice.Ulemas,parents and the community is responsible for
ReplyDeletereligious behavior in children.It is true that some teachers behave badly with children
and also teach bad.If all parents keep an eye on their children's progress at school,
bad teachers can be early detected and warned.All schools have problems with
teachers,not only Muslim schools but Muslim schools could be worse because the
lack of parents and community interest in the value of education and their own
children.
There are black sheep in each and every sector/ community. We should identify them and expose to the community. Nowadays some Muslims just want to pray five times and take care of their own affairs not the society. They see sins happening around them everyday but they just ignore saying 'oh Allah will take care'..When are we going to find out these black sheep?
ReplyDeleteالحمد الله MEHAVUM NALLADORO AAKAM جزاك الله خير بارك الله لك
ReplyDeleteNo one is perfect in this Allah!s world, five fingers are not same we have to spin the boll according to flatness of the floor, so use every one they !commonsense!
ReplyDeleteGod bless all.