அரசாங்கத்திடம் பிரதியமைச்சு பதவிகளை கேட்கவில்லை - அடித்துக் கூறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமோ அல்லது அரசாங்கத்திடமே தமது கட்சி பிரதியமைச்சு பதவிகளை யாசகம் கேட்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செயலாளர் ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில்,
எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் 3 பிரதியமைச்சு பதவிகளை கோரியதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. இதனை நான் உறுதிபட கூறுகிறேன். கட்சி மட்டத்தில் அவ்வாறான உத்தியோகபூர்வ பேச்சுக்கள் எவையும் நடைபெறவில்லை.
ஆனால் திறைமறைவில் எமது கட்சி உறுப்பினர்களுடன் எவரேனும் தனிப்பட்ட ரீதியில் தமக்கு பிரதியமைச்சு பதவி கிடைப்பதற்காக அரசாங்கத்துடன் பேசினார்களா அல்லது அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுடன் தனிப்பட்ட வகையில் பேசியதா என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது எனவும் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment