யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் இவ்வருடம் அதிகரிப்பு..!
(பா.சிகான்)
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் இவ்வருடம் அதிகரித்து செல்வதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இம்மாதம் 26 பேர் இந்நோய்க்காக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு ஆனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர தற்போது இவ்வரட ஆரம்பம் முதல் இன்று வரை 477 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர்.
சென்ற வருடத்தில் மாத்திரம் 670 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக இந்நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Post a Comment