கல்முனை பிரதான வீதியில் விபத்து - காத்தான்குடியைச் சேர்ந்தவர் வபாத்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டு கல்முனை பிரதான வீதி தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரிக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த முப்தரிப் (48) எனும் நபர் ஸ்தலத்திலேயே உயிரழந்துள்ளார்.
நேற்று மாலை சுமார் 05:15 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளங்குடா பிரதான வீதியில் தேசிய கல்வியற் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தொன்றிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி 6ம் குறிச்சி டீன் வீதியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.முப்தரிப் (48) என்பவர் மேற்படி வீதியின் ஓரத்தால் நடந்து வந்த வேளையில் திடீரென வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த 'பிராடோ' ரக வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோதிய 'பிராடோ' ரக வாகனம் காத்தான்குடி பொலிஸில் உள்ளதாகவும் வாகனத்தை செலுத்தி வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி உயிரிழந்த நபர் ஒரு மன நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment