மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த நால்வருக்கு 'பிரதீபா பிரபா' ஜனாதிபதி விருதுகள்
(மூதூர் முறாசில்)
மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த நால்வருக்கு 'பிரதீபா பிரபா' ஜனாதிபதி விருதுகள் கிடைத்துள்ளன.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் தேசிய கல்வி நிறுவகத்தில் கடந்த 2013.10.05ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவின் போதே மூதுரைச் சேர்ந்த அதிபர்கள் இருவருக்கும் ஆசிரியர் இருவருக்கும் இவ்விருதுகள் கிடைத்துள்ளன.
பாடசாலையை சிறப்பாக நிர்வகித்து வெற்றியின்பால் இட்டுச்சென்றமைக்காக மூதூர் ஆயிஷா வித்தியாலய அதிபர் ஜே. முஹமட் மாஹிர், தோப்பூர் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய அதிபர் பி.எம்.மர்சூக் ஆகியோருக்கும் மற்றும் சிறப்பான கல்விப் போதனை மூலம் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தமைக்காக மூதூர் அல்மினா வித்தியாலயத்தின் ஆசிரியர் டபிள்யூ. எம்.சிறாஜுதீன்,மூதூர் அந் நஹார் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியை மஸீனா நளீர் ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.
Post a Comment