கல்முனை மாநகர சபைக்கான அனர்த்த அபாய குறைப்பு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் கையளிப்பு
(அகமட் எஸ். முகைடீன்)
யு.என்.ஹெப்பிடாட் நிறுவனத்தினால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 04 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் தயாராகியிருத்தல் திட்டம் உத்தியோக பூர்வமாக வெளியீட்டு வைக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (21.10.2013) நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட கல்முனை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, மற்றும் பலாங்கொட ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தயாரிக்கப்பட்ட மேற்படி திட்டம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் உத்தியோக பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபைக்கான மேற்படி திட்டத்தினை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கையளித்தார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யு.என்.ஹெப்பிடாட் நிறுவனம் மொறட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்படி திட்டம் செற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிகாலத்தில் அனர்த்தங்கள் இடம்பெறுகின்றபோது ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து கல்முனை மாநகர அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான நேர ஏற்பாட்டை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment