கசினோ சூதாட்ட சட்டமூலத்தை ஆதரிக்கமாட்டோம் - முஸ்லிம் காங்கிரஸ்
(vi) உபாய மார்க்க அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்ட மூலம் மறைமுகமாக கெஸினோ சூதாட்டத்துக்கு வழிவகுக்குமென்பதால் அரசுக்கு ஆதரவான இரு கட்சிகள் உட்பட ஐந்து அரசியல் கட்சிகள் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளன.
கெஸினோவுக்கு அனுமதி வழங்கவுமில்லை வழங்கப்போவதுமில்லை என முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ள போதும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உபாய மார்க்க அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் மறைமுகமாக கெஸினோவுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவே காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக தெரிவித்தார்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி இச்சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களிக்குமென தெரிவித்தார்.
சூதாட்டத்துக்கு வழி வகுக்கும் எந்த சட்ட மூலத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது. அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் அடி மட்ட நடுத்தர வர்க்க மக்களினது சூதாட்டமாகும். கெஸினோ என்பது உயர் மட்டத்தவர்களின் சூதாட்டமாகும். எனவே இச்சட்ட மூலத்தை ஆதரிக்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரீ.ஹசனலி தெரிவித்தார்.
உபாயமார்க்க அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்ட மூலம் கெஸினோ சூதாட்டத்துக்கு வழிவகுக்குமானால் ஜாதிக ஹெல உறுமய அதை எதிர்த்து வாக்களிக்குமென அக்கட்சி ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இச்சட்ட மூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சூதாட்டத்தை ஊக்குவிக்கும் எந்த சட்ட மூலத்தையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
ஜே.வி.பி. இச்சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களிக்குமென அக்கட்சியின் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கெஸினோ சூதாட்டத்துக்கு வழி வகுக்கும் சட்ட மூலம் எந்தப் பெயரில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டாலும் ஜே.வி.பி. அதை எதிர்க்குமென்றும் அவர் தெரிவித்தார்.
அறிக்கை மட்டும் விட்டால் போதுமா...? செயலில் இறங்க வேண்டிய தருனம் இது!!!!!!!!
ReplyDelete