ஈரான், அமெரிக்காவுக்கு இடையிலான நேரடி விமான சேவை..?
(tn) ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் குறித்து அவதானம் செலுத்தும்படி ஈரான் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி கோரியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நேரடி விமானப் போக்குவரத்து இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அணுத்திட்டம் குறித்த இராஜதந்திர முயற்சியில் சுமுக நிலை ஏற்பட்டுள்ள சூழலிலேயே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானின் சிரேஷ்ட அரச அதிகாரியான அக்பர் தொட்கான் அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான இஸ்னாவுக்கு திங்கள் அளித்த தகவலில், ஜனாதிபதி ரவ்ஹானி நேரடி விமான சேவை குறித்து ஆலோசித்து வருகிறார் என்றார்.
அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் கடந்த 1979 இல் இடம்பெற்ற புரட்சிக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை ரத்துச் செய்யப்பட்டது.
Post a Comment