Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் குறித்து, அலட்டிக்கொள்ளத் தேவையில்லை - சுசில்பிரேம் ஜெயந்த்

(tn) 13ஆவது அரசியலமைப்பை உள்ளவாறே அமுல்படுத்துமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் எதுவித பிரச்சினையும் எழாது என ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பில் எதுவித மாற்றமும் செய்யாது முன்னெடுக்க வேண்டும் என்ற அதேநிலைப்பாட்டில் ஐ.ம.சு.மு.யில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அடங்கலான சில கட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே இது தொடர்பில் அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்புடன் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் காணி அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழே உள்ளது எனவே அது தொடர்பில் எது வித பிரச்சினையும் கிடையாது என்றார்.

No comments

Powered by Blogger.