Header Ads



கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் சோதனை

(எம்.எம்.ஏ.ஸமட்)

நவம்பரில் நடைபெறலுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மகாநட்டை முன்னிட்டு கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட சகல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் விஷேட சோதனைக்குட்படுத்தப்படும் என கொழும்பு மாநகர பிரதம வைத்திய அதிகாரி பிரதிப் காரியவசம் குறிப்பிட்டார்.

உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த விஷேட சோதனை நடவடிக்கைகள் இவ்வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் போது, உரிய விதிகளுக்குப் மாறாகத் திறக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விஷேட சோதனையின் போது உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உணவுப் பொருள் தயாரிப்புக்கான சமயலறைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். 

அத்துடன, உணவுபொருட்கள்; தயாரிப்பின் போது சுகாதார முறைகள் பின்பற்றபடுகின்றனவா எனவும் கவனத்திற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 7 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 3 ஹோட்டல்கள் பரிசோதனைக்கு உடபடுத்தப்பட்டுள்ளதுடன் 25 உணவகங்களும் சோனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட சகல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முன்னமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இவ்விஷேட சோதனை நடவடிக்கையினை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து சுகாதார மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Really appreciated, !not because of November UP Cumming Conference! this is very good job, need to !spot check!each and every star class hotels, sum of Colombo hotels are shit, specially tourist foreigners staying hotels are horrible. witch i have as a health and safety and All so very good Hotelier experience knowledge, i have visited many star hotels and i have seen through my own eye. sum places no body go on that, because they don!t know they job popper just go for free food, free tea, free money envelops, bribe and time pass ext.
    rite man shod be at rite place. Because i like my country, i need my tiny country to be proud. in this world.
    better pass this news to ministry of health & Public Safety.

    Thanks,

    ReplyDelete

Powered by Blogger.