திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது விசாரணை
பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென செல்வந்தர்களாக மாறியுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை, சட்டம் ஒழுங்கு அமைச்சு தீவரமாக ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டால், உடனடியாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண சம்பளத்திற்கு பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்கள் பஸ், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர்.
இவர்கள் குறுகிய காலத்தில் எவ்வாறு செல்வந்தர்களாக மாறினார்கள் என்பது குறித்து பொலிஸ் திணைக்களத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment