Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் இனவிரோத செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்

(பா.சிகான்) 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் ஒரு சில மாணவர்கள் தாடி வளர்த்திருக்கின்றார்கள் என்ற காரணத்தினால் உயர்வகுப்பு மாணவர்களின் தாக்கப்பட்டத்தைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன் என வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூப் தெரிவித்தார் 

 நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியபோது பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாகவும், தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே நல்லிணக்க செயற்பாடுகள் அதிகப்படுத்தப்படவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டதாக  அவர்  மேலும் தெரிவித்துள்ளார.

கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் பலவிதமான இனத்துவ விரோத செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள். பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒருசில கடும்போக்குடைய மாணவர்களே இதன் பின்னணியில் இருந்திருக்கின்றார்கள் என்பதும், பெரும்பாலான தமிழ் மாணவர்கள் இத்தகைய இனத்துவ விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும்  பலகலைக்கழக நிர்வாகம் இத்தகைய விடயங்களுக்கு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்ற அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் கடும்போக்குடைய மாணவர்களை எச்சரித்தும் வந்திருக்கின்றது என்பதையும்இ அறியமுடிந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர் சமூகம் என்பவற்றுக்கு அப்பால் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகம் பல்கலைக்கழக சமூகத்திடம் காணப்படுகின்றது. இவ்வாறு வெளிச்சக்திகள் மாணவர்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்துவது தொடர்பில் இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையிலும், அவ்வாறான நிலைமைகள் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது.

பொதுவாக யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்-முஸ்லிம் மாணவர்களின் நல்லுறவு அவர்களது சீரான கல்விச்செயற்பாட்டிற்கும், கற்கைக்குப் பின்னரான சமூகச் செயற்பாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்தகைய நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து நாம் சிந்திக்கவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கும் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கமான நிலை ஏற்படுவதற்கும் எம்மாலான ஒத்துழைப்புகளை வழங்குவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இவ்வாறான இனத்துவ விரோத செயற்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் அவற்றை உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தின்  கவனத்திற்கு கொண்டுவருவதனூடாகவும்இ பல்கலைக்கழக மட்டத்தில் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்துவதனூடாகவும் நிவர்த்திக்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்விடயங்களில் பலகைக்கழகத்தின் மாணவர் அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பரஸ்பரம் உறவுகளை சீராகப் பேணிக்கொள்வதும் சிறப்பானதாக இருக்கும் என இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். 

6 comments:

  1. வெட்டினேன் குத்தினேன் என்று இருக்க முடியாத்துதான். இருந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி செய்யுங்கள். வட மாகான ச்பையில் முஸ்லிம்களும் உறுப்புரிமை பேற்றதன் பின் இது முதலாவதாகவும் இறுதியானதாகவும் இருக்கட்டும்.

    கவலைப்பட்டு சரி வராது. இப்பவே இதற்கு முடிவு எடுத்தால் நன்று.
    கடும் போக்காளர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!!!!!

    ReplyDelete
  2. இவர் நேற்று ஒரு முகநூல் நண்பருக்கு அவரது கேள்விக்கி கொமாண்ட் பன்னி பதில் அளிக்கையில் தான் அங்கே நேரடி விஜயம் செய்து பல்கலைகழக நிர்வாகத்தோடு கழந்துறவாடி பாதிக்கப்பட்ட மாணவர்கள் மன்னிப்புவழங்க தண்டனை கொடுத்த மாணவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் இது ஜூனியர் சீனியர் விடயமாக பார்கப்படனுமே ஒழிய இனவாததுடன் பார்கப்பட கூடாது என்றுகூறி இருந்தார் அப்படியெனில் தாடிக்கும் ஜூனியர் சீனியருக்கும் என்ன சம்மந்தம்? யாழ்பல்கலைகழகத்தில் உண்மையில் என்ன நடக்கிறது அங்கே உள்ள முஸ்லிம் சிங்கள மாணவர்களின் வாழ்நிலை என்ன மனநிலை என்ன? உண்மையை யாழ்முஸ்லிம் இணையத்தளம் பகிறங்கமான நேர்காணல்கள் மூலம் அறியத்தருமா? பாதிப்புகளை பழி சுமத்தி இராணுவ புலனாய்வு நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தப்படுத்துவதும் தாடி தொப்பி பர்தா விடயங்களை கூட சிறிதாக்கி ஜூனியர் சீனியர் விடயங்களாக்க குறைத்து மதிப்பிடுவதும் இந்த பல்கலைகழகதில் உள்ள முஸ்லிம் மாணவர்களுக்களின் நெருக்கடிகள் எதிர்காலத்தில் எப்படி அனுகப்படும் என்பதை கோடிட்டுக்காட்டி நிட்கிறது? இப்படியே விட்டால் கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் இந்துவாகி திருமணம் முடித்துகொள்வதுபோல் கல்விக்காக இந்த பல்கலைகழகம் வரும் முஸ்லிம்கள் இந்துவாகி கல்வியை தொடரவேண்டிய நிலமைகள்தான் ஏட்படுமோ?

    ReplyDelete
  3. Yahiya Mohamed அவர்களே, தாடி தொடர்பான பிரச்சினை, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுதந்திரத்தில் எந்த தடையும் இல்லை என்று அறிய முடிகின்றது.

    தாடி தொடர்பான பிரச்சினை என்பது, பகிடிவதையின் ஒரு அங்கமாக இடம்பெற்றதா, அல்லது பகிடிவதை என்ற பெயரில் மதவெறி வெளிக்காட்டப் பட்டதா என்பதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும்.

    எல்லா விடயங்களையும் ஊடகத்தில் பகிரங்கமாக "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று அறிக்கை விட்டு சாதிக்கவும் முடியாது, அது இன்னொரு இடத்திலும் பிரச்சினையை கிளப்பலாம். ஆகவே ஆடுற இடத்தில் சத்தமில்லாமல் அடக்குவது ஒரு வகையில் நல்லது. அஸ்மின் அய்யூப் அவர்களின் அறிக்கையும் அப்படியானதாக இருக்கலாம். ஏனெனில் அஸ்மின் அய்யூப் அவர்கள் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர், இந்த விடயங்களில் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நம்புகின்றேன்.

    ReplyDelete
  4. Hello Friends,

    Normally in universities, Freshers ( first years ) before complete thier ragging periods , They can keep beared and mustach, There are many sitautaion we had in Faculty of Engineering, many muslims student came with beared- those who follow thabliq, and thowheed- but they were not allowed as I know, by froce they shaved and maintain until the period is over, non muslim student they do not know any things about SUNNAH, so we should not see this matter communally, also we have to advise our undergraduates, if they want to go to university begining they have to comply the situataion which follow traditionally, may be some one can oppose my opinion, but this is the reality, or else we have to stop entering university. we must be flexible in this matter, also we have to find out any other muslim students those who have no beared also got attacked??? if not , we may have to look this matter as traditional requirments of the university culture.

    ReplyDelete
  5. Riyas Ahamed
    2aam 3aam varudamaanathu vadakku maahaana safaiku munthiye haalam ippoo aadsiyei kaipattiye thimir thaan kaaranam...

    ReplyDelete

Powered by Blogger.