Header Ads



தலதா மாளிகைக்கு அருகாமையிலுள்ள்ள மதுபான சாலைகளை அகற்றமுடியாமல் இருப்பது ஏன்..?

(ஏ.எல்.ஜுனைதீன்)

  ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள மதுபான சாலைகளை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட முடியாமல் இருப்பது ஏன் என இலங்கைத் தேசியச் சங்க சம்மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது.

 இலங்கையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் கொள்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்கான தேவையை வலியுறுத்தி இலங்கையின் தேசிய சங்க சம்மேளனம் உட்பட பல அமைப்புக்கள் இனைந்து கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இக்கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

. இதன் முதல் கட்டமாக ஸ்ரீ தலதா மாளிகையை சூழவுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் அப்புறப்படுத்தி புகைத்தலைக் குறைப்பதற்கான சட்டத்தை ஏற்படுத்தி  நாட்டை மது பூமியிலிருந்து விடுவிக்க வேண்டும் என. மகாநாயக்க தேரர்களும் ஏனைய தரப்பினர்களும் ஒன்றாக வலியுறுத்துகின்றோம்.

  முற்றுப் புள்ளிக்கு மதுவாக அல்லாது மதுவுக்கு முற்றுப் புள்ளி என்பதை முன்னெடுக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.இந்நாட்டில் அனைத்து தேரர்களும் ஒன்றினைந்து மதுவுக்கு முற்றுப் புள்ளி என்ற கொள்கையை நடைமுறையில் சாத்தியமான ஒரு திட்டமாக மாற்றியமைக்க நாம் முன் வந்துள்ளோம்.

  புகை பிடித்தலினால் ஏற்படும் அழிவுகள் தொடர்பில் நீண்ட காலமாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகின்றோம். இருப்பினும் இது கூடியளவு முன்னேற்றம் இன்றி நீதிமன்றத்திலும் முடிவு எட்டாமல் காணப்படுகின்றது. ஆகவே எமது இலக்கை விரைவில் அடைவதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

  புகை பிடித்தலில் காணப்படுகின்ற ஆபத்தும் மதுபானம் அருந்துவதினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும் புரிந்து கொண்டு அதனை இல்லாதொழிப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அப்பாவி இளைஞர்களின் பெற்றோர்கள் இன்று தவிக்கின்றனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆகவே பெற்றோர்களின் சாபம் எதிர்காலத்தில் சம்மந்தப்பட்ட அனைவரையும் வந்து சேரும். அப்பாவி குழந்தைகளுக்காக இவ் வேண்டுகோளை விடுக்கின்றோம்.

  உலகத்திலுள்ள அனைத்து பெளத்தர்களும் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகின்றனர். இங்கு பார்க்குமிடம் எல்லாம் மதுபானசாலை காணப்படுமாகில் அவர்கள் மத்தியில் எமது இலங்கைக்கான மதிப்பு என்ன?
  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய முடியாது என கலால் திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

  நாட்டில் ஜனாதிபதிக்கு பெண்ணை ஆணாக்க முடியாது அதே போன்று ஆணை பெண்ணாக்க முடியாதே தவிர ஏனைய அனைத்தையும் செய்யலாம். அவ்வாறாயின் ஸ்ரீ தலதா மாளிகையைச் சூழவுள்ள ஒன்பது மதுபான சாலைகளையும் மூட முடியாதா? என்றும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.