Header Ads



முஸ்லிம் உம்மத்துக்கு “ஹஜ்“ தரும் பாடங்கள்

அஷ்ஷெய்க் முகம்மது பாரிஸ் 
விரிவுரையாளர் (மாலைதீவு)

நாம் கடமைக்காக மட்டும் இபாதத் செய்யாது அதில் நமக்கு என்ன அறிவுரைகள், பாடங்கள் இருக்கின்றன? என்பது பற்றியும் ஆராய வேண்டும் அப்போதுதான் நமது இபாதத்கள் உயிரோட்டமடையும். ஒவ்வொரு இபாதத்தும் நம் வாழ்வை சீர்செய்து கொள்ள நிறைய பாடங்களையும் படிப்பினைகளையும் தருகின்றன. குறிப்பாக ஹஜ் அம்சங்கள் முஸ்லிம் உம்மத்தின் வெற்றிக்காக பல விஷேடமான பாடங்களைத் தருகின்றன.

1- இறையச்சத்தை உறுதிப் படுத்தல்.
ஹஜ்ஜின் போது பாவமான காரியங்களில் ஈடுபடாது உடலுறவு வாக்குவாதம்  சன்டை போன்றவற்றிலிருந்தும் தவிர்ந்து கொண்டு அல்லாஹ் அவனை அஞ்சுமாறு நம்மைப் பனிக்கின்றான். அவன் பின்வருமாறு கூறுகையில்;

“ ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவேநல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள் ”. (ஸூரத்துல்  பகராஹ் :197)

2- “ ஏகத்துவம் “ அல்லாஹ்வை ஒருமைப் படுத்தல் 
ஹாஜிகள் அல்லாஹ்வை அழைத்த வண்ணம் புனித கஃபாஹ்வைத் தவாப் செய்வார்கள், அல்லாஹ்வை நோக்கி அவர்கள் “ உனக்கு நிகராக யாருமேயில்லை, புகழும், அருளும், அரசாட்சியும் உனக்கே சொந்தம், உனக்கு (அவைகளில்) கூட்டாளியாக யாருமே இருக்க முடியாது “ என்ற ஏகத்துவ வசனங்களை ஓயாது மொழிந்து கொண்டேயிருப்பார்கள். இவ்வசனங்கள்  அல்லாஹ்வை ஒருமையப் படுத்தும் வசனங்களாகும். இவை  “ தௌகீத் “ ஏகத்துவமென்றால் என்னவென்று சொல்லித்தரும் வசனங்களாகும். இவை நம்முள்ளங்களில் எப்போதும் உதிக்க வேண்டும். இவை நம் வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அப்போதுதான் நமது இவ்வுலக வாழ்வு ஜெயம் பெறும், மறுமை வாழ்வு வசந்தமடையும்.

3- முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியமும், பலமும் பலப்படுத்தப்படுகின்றது
ஹஜ் என்பது புனித மக்காவில் வருடாந்தம் நிகழ்கின்ற முஸ்லிம் உம்மத்தின் சர்வேதேச மாநாடாகும். தேசம், மொழி, நிறம், பதவி, அந்தஸ்து இவைகளுக்கு அப்பால் எண்ணிக்கையற்ற பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள் “ லெப்பைக் லெப்பைக் “ என்று ஒரே மொழியில் சப்தமிட்டு அழுத வண்ணம் அல்லாஹ்வை அழைக்கின்றனர். இங்கு முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியமும் சக்தியும் பலமடைவதை காண முடிகின்றது. இங்கு தேசம், நாடு, மொழி வேறுபட்ட போதிலும் ஈமானிய உள்ளங்கள்  ஒரே இடத்தில் ஒன்று குவிந்துள்ளன. அரசியல், சங்கம், இஸ்லாமிய இயக்கம் போன்ற இன்னோரென்னவற்றில் எழுந்த சிற்சில கருத்து முரண்பாடுகளுக்காக வேண்டி நாம் வேறுபடுகின்றோம், நமக்கிடையில் விட்டுக்கொடுப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது, நமது இப்பலகீனம் எதிரிகளின் பலமாக மாறுகின்றது, அவர்கள் இதை நமக்கெதிராக ஆயுதமாக பயண்படுத்துகின்றனர். மனிதர்களின் சிந்தனைக் கூர்மைக்கேற்ப கருத்து அபிப்பிராயங்கள் வேறுபட முடியும் முறண்பட முடியும். மாறாக உள்ளங்கள் ஒருபோதும் முறண்படக்கூடாது. அவ்வாறு முறண்பட்டால் அதுவே தோழ்வியின் துவக்கமாகும். நாம் ஏன் சோதிக்கப்படுகின்றோம் அடக்கியொடுக்கப்படுகின்றோம்? ஏன் நம் சமூகத்திடம் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை? என்ற கேள்விகளுக்கு நமது அந்த பலகீனமே பதிலாகும், இந்நிலை மாறவேண்டும். ஹாஜிகள் போன்று கருத்து முறண்பாடுகளுக்கு  அப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டும். “ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு “ எல்லோறும் உடன்பட்ட பொதுவான அடிப்படையான விடயங்களில் ஒன்று படுவோம் கருத்து முறண்பட்ட விடயங்களில் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்வோம். நபி (ஸல்) அவர்களது முப்பதாவது வயதில் குறைஷித் தலைவர்கள் கஃபாஹ்வில் யார் ஹஜருல் அஸ்வத் கல்லை வைப்பது? என்ற விடயத்தில் கருத்து முறண்பட்டனர். யார் கஃபாஹ்வுக்கு அதிகாலையில் முதல் வருகின்றாரோ அவர் சொல்லும் தீர்ப்பை அமுல்ப்படுத்துவோம் என்று  முடிவுக்கு வந்தனர். அங்கே அதிகாலையில் கஃபாஹ்க்கு முன்னால் நபியவர்கள் நிற்ப்பதைக் கண்ட  குறைஷிகள் நியாயமான தீர்வுக்கு நபியவர்கள் தான்  பொருத்தம் என உடன்பட்டார்கள். நபியவர்கள் தனது தோலிலிருந்த ரிதாவை விரித்து அதன் நடுவில் ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அனைத்து குறைஷித் தலைவர்களும் சேர்ந்து பிடித்து கஃபாஹ்வில் அதை  வைக்கும்படி சொன்னார்கள். அங்கே முறண்பட்ட தலைவர்கள் உடன்பட்டனர்  வேற்றுமையடைந்தவர்கள் ஒற்றுமைப் பட்டனர். இஸ்லாம்  ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கற்றுத் தந்த மார்க்கம் இவை முஸ்லிம்களாகிய நம்மனைவர்களது வாழ்க்கையிலும் நடைமுறைப் பண்பாக மாற வேண்டும் அப்போதுதான் முஸ்லிம் உம்மத் பலமடையும். வெற்றியைய் நோக்கி நகரும். உன்மையில் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் ஐக்கியமாக பலமிக்க்கவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். மறைந்து போன நம்வரலாறை நாம் மீட்பது காலத்தின் தேவையாகும்.

4- ஹஜ் இஸ்லாமிய சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்றது
அங்கே ஹாஜிகள் தங்களுக்குல்லிருக்கும் வித்தியாசங்களைக் களைந்து விட்டு ஒரே மண்ணில் பிறந்த சகோதரர்கள் போன்று அன்பையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் அவர்களுக்கிடையில் பரிமாறிக்கொள்வதைக் காண முடிகின்றது. உடல்ப் பலமுள்ளவர் நடக்க முடியாமல் சிரமப்படும் பலகீனமானவர்க்கு உதவி செய்வதையும் மேலும் கீழே விளுந்து எழும்ப முடியாமல் அவதிப்படுபவரை தூக்கி எழுப்பாட்டுவதையும் உணவு பானங்கள் உள்ளவர்கள் இல்லாதவர்கழுக்கு கொடுத்து உதவுவதையும் பார்க்க முடிகின்றது. வாளிபர்கள் வயோதிபர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அறபாவிலிந்து வரும் ஹாஜிகளை வரேவேற்று அவர்களுக்கு தண்ணீர் குடிபானங்கள் உணவுகள் கொடுத்து அவர்களுக்கு மத்தியில் ஆளமான அன்பை ஏற்படுத்துகின்ற காட்சியையும் அங்கே உற்றுநோக்க முடிகின்றது. இதற்கு முன்னர் இவர்கழுக்கிடையில் எந்த அறிமுகமும் இருக்கவில்லை. இவர்களில் யாரும் யாரையும் கண்டதுமில்லை. இவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக வேண்டியே இவ்வாறு அன்பாக நடந்துகொள்கின்றனர். இந்த ஹாஜிகளின் ஆளமான அன்பையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் பார்க்கும் போது “ பரஸ்பர அன்பும், கருனையும், இரக்கமும் நிரைந்த முஃமின்களுக்கு உதாரணம் ஒரு உடலைப் போல “  என்ற நபிகளாரின் ஹதீத் ஜாபகத்துக்கு வருகின்றது.
காஷ்மீர், பலஸ்தீன், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் வாழும் நம் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நாளுக்கு நாள் கடுமையாக தாக்கப்படுகின்றார்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள். இவர்கள் படுகின்ற வேதனைகளை நம்முள்ளங்கள் உணரவேண்டும். இவரிகளின் விடிவுக்காக அதிகமதிகம் துஆ செய்வது நம்மீது கடமையாகும்.

5- இஹ்ராம் ஆடை கபன் ஆடையை நினைவூட்டுகின்றது.
இரண்டு துண்டுகளைக் கொண்ட இஹ்ராம் ஆடை  வெள்ளை நிறமாக இருத்தல் அவசியமாகும். தைத்த ஆடைகளை உடலிலிருந்து அகற்றியதன் பின்னரே இஹ்ராம் அணிய வேண்டும். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் குழித்தலும் உடலுக்கு மனம் பூசுவதும் சுன்னாவாகும். அதேபோன்றுதான் ஒருவர் மரணித்து விட்டால் அவரைக் குழிப்பாட்டி  மனம் பூசி வெள்ளை நிற கபனாடை அணிவது ஜனாஸாவுடைய ஒழுங்கு முறையாகும், எனவே இங்கு இஹ்ராமாடைக்குறிய ஒழுங்கும் கபனாடைக்குறிய ஒழுங்கும் ஒன்று படுகின்றது. எனவேதான் இஹ்ராம் ஆடை கபன் ஆடையை நினைவூட்டகின்றது.  ஹஜ் செய்பவர் ஹாஜ் , மரணித்தவர்  ஜனாஸா என்ற பெயர் மட்டுமே இங்கு  வேறுபடுகின்றன.

6- ஹஜ் மறுமை நாளை ஜாபகப்படுத்துகின்றது.
ஹாஜிகள் மினாவிலிருந்து அறபாவுக்கு வருவதும், பின்னர் அறபாவிலிருந்து முஸ்தலிபாவுக்கு வருவதும் மரணித்தவர்கள்  கப்ரிலிருந்து எழும்பி விசாரனைக்காக மஹ்ஷருக்கு வருவதைப்போல இருக்கின்றது. அல்லாஹ் பின்வருமாறு கூறுகையில்;
"நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள் " (ஸூரத்துல் மஆரிஜ் :43)

7- ஹஜ் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் பொறுமையையும் தியாகத்தைய்யும் கற்றுத்தருகின்றது.

அங்கே ஹாஜிகள் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நசுக்கப்படுகின்றார்கள். தாகத்துக்கு மத்தியில் பொறுமையுடன் அவர்களது கடமைகளை முடிக்கின்றனர். ஏனய இபாதத்களை விட ஹஜ் கடமையை நிறைவேற்ற நிறைய பொறுமை தேவைப்படுகின்றது.  ஹாஜர் (அலை) தனது மகனான இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகத்தைப் போக்குவதற்காக ஸபா மர்வாஹ் எனும் இரு மலைகளுக்கிடையில் தண்ணீர் தேடி தடுமாரி தத்தளித்தார்கள்  பொறுமையோடும் தியாகத்தோடும் கஷ்ட்டப் பட்டதன் விளைவாவாகவே ஸம் ஸம் தண்ணீர் ஊற்றெடுத்தது.  அத்தியாக நிகழ்வை ஜாபகப் படுத்தும் முகமாகவே ஸபா மர்வாஹ்க்கு மத்தியில் தொங்கோட்டோம் ஓடுவது ஹஜ்ஜின் ஒரு அம்சமாக  இருக்கின்றது..  இந்த ஹஜ் பயணத்தில் ஹாஜிகள் பொறுமை தியாகம் போன்ற பயிற்சிகளைப் பெறுகின்றனர்.  எனவே வாழ்க்கையின்  வெற்றிக்கு பொறுமை , தியாகம் அவசியமாகும்.

No comments

Powered by Blogger.