கொள்ளையன் துப்பாக்கி குண்டில் இருந்து ஊழியர் உயிரை காப்பாற்றிய செல்போன்
அமெரிக்காவில் உள்ள ஓர்லண்டோவின் புறநகரில் வின்டர் கார்டன் பகுதி உள்ளது. இங்கு 'கியாஸ்' அலுவலகம் உள்ளது.
சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு ஒரு கொள்ளையன் புகுந்தான். முதலில் தனக்கு உதவி செய்யும்படி கேட்ட அவன் திடீரென தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கி காட்டி பணப் பெட்டியை திறக்கும்படி மிரட்டினான்.
அதற்கு அந்த ஊழியர் மறுத்து விட்டார். எனவே, அவருடன் இருந்த மற்றொரு ஊழியரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினான். அவரும் பெட்டியை திறக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த அவன் ஊழியரின் மார்பில் துப்பாக்கியால் சுட்டான். பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
கொள்ளையன் சுட்டத்தில் ஊழியரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஏனெனில் இவர் தனது சட்டைப் பையில் செல்போன் வைத்திருந்தார்.
இதனால் கொள்ளையனின் துப்பாக்கி குண்டு ஊழியரின் மார்பை துளைக்காமல் செல்போன் தடுத்துவிட்டது. அந்த செல்போன் முன்பகுதி மட்டும் உடைந்து சேதம் அடைந்தது.
இந்த விவரம் உடனடியாக ஊழியருக்கு தெரியவில்லை. வின்டர் கார்டன் போலீசாரின் விசாரணையின் போது தான் தெரிய வந்தது.
Post a Comment