Header Ads



பிரசவத்தில் ஆச்சரியம்...

இந்தியா  - மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு அடுத்தடுத்த பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவரான கூலித் தொழிலாளி சரவணக்குமாரின் மனைவி A(வயது 31). பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அன்னலட்சுமிக்கு நேற்று 3 ஆண் குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்தது.  குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அன்னலட்சுமிக்கு நேற்று நடந்தது மூன்றாவது பிரசவம் ஆகும். இவருக்கு முதல் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் என இரண்டு குழுந்தைகளும், மூன்றாவது பிரசவத்தில்  மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதில் இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை மட்டும் இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது. inne

No comments

Powered by Blogger.