பள்ளிவாயல்கள் யாருக்குச் சொந்தம்..?
(கல்தூன்)
பள்ளிவாயல்கள் இஸ்லாமிய சமூக அமைப்பின் மத்திய நிலையங்களாகும். சமூக, சட்டத்துறை, அரசியல், பரிபாலனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிவாயல்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் ஆற்றி வந்திருக்கின்றது.
றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு, முதற்கட்டமாக குபாவிலும், மதீனாவிலும் பள்ளிவாயல்களை நிர்மாணித்தமை, இஸ்லாமிய சமூக அமைப்பில் பள்ளிவாயல்களுக்கு எத்தகைய உயரிய இடம் காணப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இன்றிருப்பது போன்று வெறும் மதஸ்தாபனமாக இல்லாமல், மிக விரிவான சமூகப் பணிகளை பள்ளிவாயல்கள் வரலாற்றில் ஆற்றியிருக்கின்றன. வெளிநாட்டுத் தூதுக் குழுக்கள் வருகை தருகின்ற தருணங்களில், அவர்கள் பள்ளிவாயல்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.
'மஸ்ஜித்' என்ற அரபுச் சொல் 'ஸஜத' என்ற மூலச் சொல்லில் இருந்து உருவாகின்றது. இதன் அர்த்தம் சிரம் பணிந்தான் என்பதாகும். அரபிலக்கணப்படி, மஸ்ஜித் என்பதற்கு ஸுஜுத் செய்கின்ற இடம் என்று பொருளாகும். இறைத் தொடர்பை உருவாக்குகின்ற தளமாக இருக்கின்ற பள்ளிவாயல்கள், மனிதர்கள் இடையிலான உறவுகளை போஷித்து வளரக்கின்ற இடமாகவும் திகழ்கிறது. இந்த வகையிலேயே கூட்டாக நிறைவேற்றப்படுகின்ற தொழுகைகளுக்கு இருப்பத்தேழு மடங்கு நன்மைகள் இருப்பதாக இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
தனிப்பட்ட வணக்கங்கள் கிரியைகளோடு சுருங்கிக் கொள்ளும் ஒரு மதமாக மட்டும் இன்றி, சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான அம்சங்களில் கவனம் செலத்தும் கொள்கையொன்றாகவும் இஸ்லாம் திகழ்கிறது. இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் இடமாக பள்ளிவாயலே காணப்படுகின்றது. பள்ளிவாயலோடு சம்பந்தப்படுகின்ற மனிதர், அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட கடமைகளை மட்டுமன்றி, அடியார்களோடு தொடர்பான கடமைகளில் கவனம் செலுத்தவும், சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் வாய்பைப் பெறுகின்றார்.
பர்ளு ஜன் என்கிற தனித்தனியாக நிறைவு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமின்றி, பர்ளு கிபாயா எனப்படுகின்ற சமூகக் கடமைகளையும் நிறைவு செய்கின்ற வகையில் பள்ளி வாயல்கள் அமைய வேண்டும். அதனாலேNயு பள்ளிவாயலோடு தொடர்புடையவர்களுக்கு, மறுமையில் அர்ஷின் நிழல் கிடைக்கும் என றஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆன்மீகத் தேவைகளை மட்டுமின்றி, பௌதீகத் தேவைகளையும் பள்ளிவாயல்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதில் இஸ்லாம் கணடிப்பாக இருக்கின்றது.
உதாரணமாக இமாமாக நின்று தொழுகை நடாத்தும் போது, நீண்ட நேரம் தொழுகை நடாத்தி பின்னால் நின்று தொழுபவர்களுக்கு சிரமம் ஏப்படுத்திய முஆத் பின் ஜபல்; (றழி) அவர்களை, ரஸுல் (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். இவ்விதம் சமூகத்தின் பன்முகத் தேவைகளை கருத்தில் எடுக்கும் பள்ளிவாயல்கள், வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய அறிவின் மையப் புள்ளியியாகவும் திகழ்ந்திருக்கிறது. சுருக்கமாகச் செல்வதானால், தொழுகையை நிறைவு செய்யும் இடங்களாக மாத்தரம் பள்ளிவாயல்கள் ஒருபோதும் இருந்ததில்லை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழாத நாடுகளிலும், பள்ளிவாயல்கள் இதே போன்ற உயிரோட்டத்துடன் திகழந்;திருக்கின்றன. அல்லாஹ்வின் பெயர் ஒலிக்கும் மஸ்ஜிதுகளை மையமாக வைத்து, முஸ்லிம் சமூகம் இன்றும் மிக நேர்த்தியாக ஒழுங்குபடு;த்;தப்பட்டுள்ளது. (பள்ளிவாயல் உலகின் பல நாடுகளில் அதன் பணியை பூரணமாக நிறைவு செய்யாவிட்டாலும்) இந்த ஒழுங்கு,இன்று வரை தொடர்கின்;றது. இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள் கூட இதற்;கு விதிவிலக்கல்ல
இலங்கையில் மஸ்ஜித்கள்
ஆரம்ப காலங்களில் மஸ்ஜிதுகள் இதே போன்று உயிர்த்துடிப்பான பணிகளை இலங்கையிலும் நிறைவேற்றி உள்ளது என்று கருத வேண்டி இருப்பினும், அவை பற்றித் தெரிந்து கொள்வதற்;கான, போதிய அக்கால வரலாற்று ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து, ஆரம்பித்த உஸ்மானிய சாமராஜ்யத்தின் வீழ்ச்சியும், ஜரோப்பிய காலனித்துவவாதமும், இலங்கை முஸ்லிம்களைப் பாதித்தமையும,; குறிப்பாக அரபுலகுடனான தொடர்புகள் குறைவடைந்து, தென்னிந்திய முஸ்லிகளுடனான தொடர்பு வலுவடைந்தமையும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு. இக்காலப்பகுதியில்தான் பெருமளவு எமது பள்ளிவாயல்கள், தொழுகை, கந்தூரி, மையத்துக்களை நல்லடக்கம் செய்தல் போன்ற பணிகளை மாத்திரம் நிறைவேற்றும் தளங்களாக மாற்றம் அடைந்திருக்க வேண்டும்.
இதே காலப்பிரிவில், இலங்கையில் பரந்து பட்ட அளவில் தரீக்காக்கள் செல்வாக்குச் செலுத்தின. பல்வேறு தரீக்காக்கள் இலங்கையில் சேவை புரிந்துள்ளன. 'லெப்பைமார்கள்' எனப்படுபவர்களே பள்ளிவாயல்களில் பணிபுரிந்தார்கள். இத்தரீக்காக்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாவிட்டாலும், பரந்துபட்டளவில் சமூகப் பரிமாணம் கொண்டதாக பள்ளிவாயல்களை இவை மாற்றவில்லை. இஸ்லாத்தில இல்லாத பல நூதன அம்சங்களும் இவற்றின் ஊடாக சமூகத்தில் பரவின .
1950 களில் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களின் பிரசன்னம் இடம் பெறுகின்றது. தரீக்காக்களின் செல்வாக்கு பெருமளவு குறைவடைந்து, இயக்கங்கள் அவ்விடத்தைக் கைப்பற்றிக் கொண்டன. குறிப்பாக பெருமளவு செல்வாக்குக் கொண்டதாக தப்லீக் ஜமாஅத் மாறியது. இன்றும் மிகப் பெரும்பாலான பள்ளிவாயல்கள் இதன் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கிறன. சில பள்ளியவயல்களின் யாப்பிலேயே இவை 'தப்லீக்' பள்ளிவாயல்கள் எனக் குறிப்பி;;டப்பட்டுள்ளன. பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் இது தப்லீக் பள்ளிவாயல்கள் என வெளிப்படையாகவே கூறி வருகின்றார்கள். சில பள்ளிவாயல்கள் தப்லீக் அமைப்பின் 'மர்கஸ்கள்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஏவ்வாறாயினும் தப்லீக் அமைப்பு சமூக விவகாரங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், 'தப்லீக்' பள்ளிவாயல்களும் உயிர்த்துடிப்;பானதொரு பணியை மேற்;கொள்வதாக் மாற்றமடையவில்லை. பெரும்பாலும் இப்பள்ளிவாயல்கள் ஏனைய அமைப்புக்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிவயல்கள் என்பவை எமது மத்திய நிலையங்கள். அவை முஸ்லிம் சமூகத்தின் சொத்து. இவை எந்த ஒரு தனி நபரினதோ, சிறு குழுக்களினதோ, விருப்பு, வெறுப்புகளுக்குத் தலை சாய்ப்பதாக அமைய முடியாது. தப்லீக் அமைப்பாக இருந்தாலும், ஏனைய அமைப்புக்களாக இருந்தாலும், அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சிறுபான்மையினரே என்பதை மறந்து விடமுடியாது. மிகப் பெருமபான்மையானவர்கள் அமைப்புகளுக்கு வெளியிலேயே இருக்கிறார்கள்.
இன்று சில அமைப்புக்கள் தமக்கென்று சொந்தமாகப் பள்ளிவாயல்களை அமைத்திருத்திருப்பதாக நாம் குரல் எழுப்பி வருகின்றோம். ஆனால், மறுபுறத்தில் இருக்கின்ற பள்ளிவாயல்களில் தப்லீக் மற்றும் தரீக்கா அமைப்புக்கள் ஏக போக உரிமைகாட்டி வருவதோடு, ஏனைய அமைப்புகளுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்வினையாகவே, இப்பள்ளிவாயல்கள் கட்டப்பட்டுள்ளன என்பதை வசதியாக மறந்துவிடுகின்றோம். தப்லீக்; அமைப்பு ஓரளவு செல்வாக்கான அமைப்பாகத் தெரிவதால் இது பற்றி வாய்; திறக்கப் பலர் பயப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்நிலை பள்ளிவாயல்களை அவற்றின் உண்மையான உயிர்த்துடிப்புடனான வடிவத்துடன் உருவாக்குவதில் சிக்கலை உருவாக்குகிறது
தப்லீக் அமைப்பினதோ அல்லது எந்தவொரு அமைப்பினதோ பணியை நாம் குறைத்து மதிப்பிட வில்லை. ஆனால் அதற்காக முஸ்லிம் சமூகத்தின் தலைமைப்பீடங்களின் ஏக போக உரிமையை எவருக்கும் வழங்கிவிட முடியாது. தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, ரிபாத் போன்ற பல அமைப்புக்களை ஜம்இய்யதுல் உலமா அங்கீகரித்துள்ள நிலையில், மஹல்லா மட்டங்களில் பாகுபாடுகளை ஜம்இய்யத்துல் உலமா கண்டும் காணாதது போன்று நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. கிராம மட்டங்களிலேயே, மாற்றுக் கருத்துக்களை சகித்துக் கொள்வதற்கான மனப்பக்குவம் இல்லையென்றால், தேசிய ரீதியில் அதனை எவ்வாறு உருவாக்கப் போகிறோம்?
முஸ்லிம்களின் பொதுத் தலைமைத்துவம், பொது ஷூறாக் கட்டமைப்புக் குறித்துப் பேசப்பட்டு வரும் நிலையில், பள்ளிவாயல்களை அடிப்படையாக வைத்து, கீழ் மட்டத்திலிருந்து இக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளிவாயல் நிர்வாகிகள்
பள்ளிவாயல்கள் அல்லாஹ்வின் பெயர் மாத்திரம் ஒலிக்க வேண்டிய இல்லங்கள். இஸ்லாம் வலியுறுத்தும் சமூக நீதி, பள்ளிவாயல்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அரபுலகில் நிலவி வந்த அடிமை முறைகள், வர்க்க முறைகள், நிறப்பாகுபாடு, கோத்திரப் பெருமைகள் உள்ளிட்ட மனித சமத்துவத்திற்கெதிரான வாதங்களை, இஸ்லாமியப் பள்ளிவாயல்கள் தகர்த்தெறிந்தன. சமூக நீதியை உருவாக்குவதை நோக்காகக் கொண்ட வேலைத்திட்;டங்கள், பள்ளிவாயல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டன.
இன்றைய பள்ளிவாசல்கள் சமூக நீதியை நோக்கி ஓர் அங்குலத்ததைக் கூட எடுத்து வைக்கவில்லை. பெரும் மாளிகையைச் சுற்றி பல்வேறு குடிசைகள் அமைந்திருக்கின்ற சமச்சீரற்ற பொருளாதார ஒழுங்கு எமது ஊர்களில் நிலவுகிறது. கல்வி ரீதியில் முஸ்லிம் சமூகம் அதள பாதாளத்தில் இருக்கின்றது. பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். இவற்றை எதிர்கொள்வதற்கான, எதுவித உருப்படியான திட்டங்களும் எமது பள்ளி நிர்வாகிகளிடம் இல்லை.
ஊரில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், நிர்வாகத்திற்கு வருகிறார்கள். பள்ளியை விஸ்தரிப்பது, அழகுபடுத்துவது, பெயின்ட் அடிப்பது என்று சில பணிகளை மேற்கொள்ளும் போதே நிர்வாகக் காலம் முடிந்து விடுகின்றது. இத்தனைக்கு;ம வருடக்கணக்கில் ஒரு சில ஸப்புகள் தொழுகைக்காகத்; தேவைப்படும் இடம் போக, மிகுதி தூசி தட்டிக் கிடக்கிறது. அவற்றின் பராமரிப்புக்காக இலட்சக்கணக்கான ரூபாய்கள் மாதாந்தம் செலவாகின்றன.
மிஞ்சிமிஞ்சிப் போனால், நோன்பு வந்தால் கஞ்சி காய்ச்சுவதோடு பள்ளிவாயல்கள் தமது சமூகப் பணியை சுருக்கிக் கொள்கின்றன. அண்மைக் காலத்தில் சில இடங்களில், கூட்டு ஸகாத் நடைமுறை மேற்கொள்ளப்பட்டிருப்பினும், அதுவும் வினைத்திறனாகச் செயற்படுவதாகத் தெரியவில்லை. எனவே, இத்தனை காலம் சம்பாதித்ததோடு, இனி வயதான காலத்தில் சமூக அங்கீகாரம் தேவை என்ற ரீதியில் நிர்வாகிகளாக மாறாமல், தமது பொறுப்புக்கள் மிக உயர்வானது என்பதனை நமது நிர்வாகிகள் உணர வேண்டும்.
வரலாற்று ரீதியான உயிர்த் துடிப்பான வடிவத்தில் பள்ளிவாயல்களை மாற்ற வேண்டிய வரலாற்றுத் தேவை இன்று உருவாகி இருக்கின்றது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை முறையாகத் தீர்ப்பதானால், இது அவசரமானதும், அவசியமானதுமாகும்.
Post a Comment