அக்கரைப்பற்று கல்வி வலயத்தினர் மேற்கொண்ட நுவரெலியாவுக்கான கல்விச் சுற்றுலா
(அனாசமி)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற கல்வி நிருவாகப் பிரிவினர் மற்றும் கணக்காளர் பிரிவிலுள்ள ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நுவரெலியாவுக்கான கல்விச்சுற்றுலா ஒன்றை அண்மையில் (ஒக்டோபர் 5,6 இரண்டுநாட்கள்;) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம். காசீம் அவர்களின் தலைமையில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிருவாகம்) ஏ.எஸ். அகமது கியாஸ் மற்றும் கணக்காளர் கே. றிஸ்வி யஹ்ஸர் ஆகியோரின் வழிநடாத்தலின்கீழ்; நிருவாகப் பிரிவு மற்றும் நிதிப்பிரிவுகளில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இலங்கையின் மிகவும் குளிர்ச்சிப்பிரதேசமானதும் கோடைகாலத் தலைநகராகவும் அமையப்பெற்றுள்ள நுவரெலியா மாநகரத்தையும், அந்த மாநகரத்தின் மத்திமமாக இயங்கிவருகின்ற மாநகரசபையின் ஆளுகைகளையும் அறிந்;து கொள்றும் நோக்கில் இந்தச் சுற்றுப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் களப்பயணத்தின்போது தேயிலைத் தொழிற்சாலைக்கும் விஜயத்தை மேற்கொண்டனர்.
இலங்கையின் முகாமைத்துவ நிருவாகக் கட்டமைப்பில் கடந்தகாலங்கில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட ஒரு விடயம் ஐந்து எஸ் என்கிற ஜப்பானிய முகாமைத்துவக் கட்டமைப்பாகும். இந்த ஐந்து எஸ் (5ளு) எண்ணக் கருக்களை மிகவும் உறுதியான முறையில் பின்பற்றுகின்ற ஒரு மாநகரசபையாக நுவரெலியா மாநகர சபையின் இயக்கத்தை அறிந்து அந்த முறையை தன்னுடைய நிருவாகத்திலும் மேற்கொள்ள ஆவல் பூண்டுள்ள நிலையில் இந்தச் சுற்றுப்பயணம் அமைந்திருந்தாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் நிருவாக உத்தியோகத்தரான ஏ.எல். நாஹூர்தம்பி கூறினார். பலமுறை முகாமைத்துவத்திற்கான உற்பத்தித் திறன் விருதினை பெற்றுக் கொண்ட ஒரு மாநகரசபையாக நுவரெலியா மாநகரசபை விளங்குகின்றது. மக்களின் அன்றாடம் தங்களுடைய பணிகளை மேற்கொள்ள வருகின்றபோது அங்குள்ள ஊழியர்கள் அவர்களை மிகவும் மரியாதையாக மதித்து பொதுமக்களின் தேவைகளை உடக்குடன் நிறைவு செய்கின்றனர். அது மட்டுமன்றி நிருவாகப் பிரிவுகளில் காணப்படுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது கடமையை சரியான முறையில் நிறைவேற்றவும், ஆவணங்கள் கோவைப்படுத்தப்படுகின்ற முறைகளும் இந்த 5ள முறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர், கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப்பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் நுவரெலியா மாநகரசபைக்கு முன்னால் நிற்பதையும், நுவரெலியா பூந்தோட்டம் போன்றவற்றை சுற்றிப்பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்களையும் காணலாம்.
Post a Comment