மர்ஹும் ஹாஜியார் பவுன்டேஷன் அமைப்பு அங்குரார்ப்பனம்
(ஏ.எல்.ஜனூவர்)
மருதமுனை பெரிய ஹாஜியார் என்றழைக்கப்படும் மர்ஹும் எம்.எம்.ஓ.ஏ.அஹமது முகைதீன் ஹாஜியார் பரம்பரையில் உருவான சந்ததியினரைச் சேர்த்து ஹாஜியார் பவுன்டேஷன் எனும் அமைப்பை நேற்று (2013.10.19) நிந்தவூர் ஹாஜியார் தோட்டத்தில் ஆரம்பித்து வைத்தனர்.
இவ்வமைப்பின் நோக்கமானது ஏழைகளுக்கு உதவி செய்தல், குடும்பத்தில் தேவை உள்ளவர்களுக்கு உதவுதல், உயர் தரத்தில் சித்தியடைந்து மேற்படிப்புக்காக வசதியற்ற மாணவர்களுக்கு உதவுதல், வட்டியில்லா கடன் வழங்கல், ஏழை மாணவர்களுக்கு உதவுதல், இஸ்லாமிய நடைமுறைகளுக்கான நன்கொடை வழங்கல் போன்ற பல நல்ல விடயங்களை நோக்காகக் கொண்டு இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக பிரபல தொழிலதிபர் எம்.எம்.ஷபீக் ஹாஜியார் (சீப்பலஸ் உரிமையாளர்), ஆலோசகர்களாக ஏ.எல்.இப்றாலெப்பை (ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்), எம்.எம்.ஏ.அப்துல் குதா (பிரதம கணக்காளர்), கே.எல்.ஏ.வாஹிட் (ஓய்வு பெற்ற அதிபர்) இவர்களுடன் 21 மசூறா சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
இவ்வைபவத்தில் குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 250 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment