Header Ads



பாக்கிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்கா மூக்கை அறுத்துவிட்டது - இந்திய ஊடகம் புலம்பல்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும், இந்த கொள்கை முடிவில் துளியளவு கூட மாற்றம் இல்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரதமரான பின்னர் முதன்முறையாக அமெரிக்கா சென்றார். இவர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சின்போது தலிபான் ஒழிப்பு, பாகிஸ்தான் ஒத்துழைப்பு , எரிசக்தி பங்கீடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

அமெரிக்கா கிளம்பும் போது நவாஸ் ஷெரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் , 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் விவகாரத்தினால் இங்கு அணு ஆயுதங்கள் பெருக்க வேண்டியுள்ளது. இந்த அபாய நிலையை தவிர்க்க காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும். இதற்கு இந்தியா விரும்பவில்லை என்றால் சர்வதேச நாட்டு சக்திகள் தலையிட வேண்டும் என்றார். 

இவரது பேச்சு வெளியானதும், இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறுகையில்; காஷ்மீர் விவகாரதத்தில் 3-வது நபர் தலையிட்டை இந்தியா எப்போதும் அனுமதிக்காது என்றார். 

இந்நிலையில் ஷெரீப் அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்ததும் நிருபர்களிடம் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் காஷ்மீர் விஷயத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை. இதில் எங்களின் கொள்கை முடிவில் துளி கூட மாற்றம் இருக்காது என பளீச் பதில் அளித்தனர். இரு உள்நாட்டு விவகாரங்களை இரு நாட்டினரும் பேசித்தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதன் மூலம் அமெரிக்கா, பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.