Header Ads



நிந்தவூர் - அட்டப்பள்ளம் ஸஹீதா வித்தியாலயத்தில் தனியாரின் அட்டகாசம் (படங்கள்)


(இப்னு செய்யத்)

நிந்தவூர் அட்டப்பள்ளம் ஸஹீதா வித்தியாலயத்தின் பாதைக்கான காணியில் தனியார் ஒருவர் தனக்கும் அதனூடாக பாதை இருப்பதாகக் கூறி, திடீரென்று கதவு ஒன்றினையும் வைத்துள்ளார். குறிப்பிட்ட காணி பாடசாலைக்குரியதென்றும், அதனை பாடசாலை தொடங்கிய காலத்தில் இருந்து பாதையாக பயன்படுத்திக் கொண்டு வருவதாகவும் பாடசாலையின் அதிபர் ஏ.அன்வர் தெரிவித்தார்.

பாடசாலைக்குரிய காணியில் பாதை கேட்டு பிரச்சினைப்படுத்திக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட தனியாருக்கு சொந்தமான காணிக்கு இரண்டு பக்கங்களில் பாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட தனியார் பாடசாலைக்கான பாடசாலைக்குச் செல்லும் பாதையின் எல்லையில் சில வருடங்களுக்கு முன்னர் சுவர் கட்டியுள்ளார். இதன் போது அவர் தனது காணிக்கும் பாதை இருப்பதாகக் கூறவில்லை என்றும், சுவரில் எந்தக் கதவினையும் ஏற்படுத்தாது சுவரை அமைத்து விட்டு தற்போது தனக்கும் பாதையில் உரிமை இருக்கின்றதென்று குறிப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

புhடசாலையின் காணிக்குள் தனியார் ஒருவர் சுவரினை உடைத்து கதவை ஏற்படுத்தி இருப்பதனால் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இப்பிரச்சினை பற்றி கல்முனை கல்வி அலுவலகத்திற்கும், பொலிஸாருக்கும், நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கும் அறிவித்துள்ளதாகவும், இது பற்றி பாடசாலையின் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை, பாடசாலையின் காணியில் தனியாருக்கு மேலதிகமாக பாதை ஒன்றினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பிரதேச அரசியல்வாதி ஒருவர் உறுதிதுணையாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



No comments

Powered by Blogger.